ஜியோ நிறுவனத்தின் அதிரடி சலுகையால் தெருவுக்கு வந்த பிரபல நிறுவனம்..!


ஏர்செல் நெட்ஒர்க் சேவையானது ஆறு மாநிலங்களில் நிறுத்தப்படும் என்று டிராய் அறிவித்துள்ளது.

பிரபல தொலை தொடர்பு நிறுவனமான ஏர்செல் நிறுவனம் தனது சேவையை குறிப்பிட்ட ஆறு மாநிலங்களில் ஜனவரி 30 முதல் அதிரடியாக நிறுத்தவுள்ளதாக தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் தெரிவித்து உள்ளது.

ஜியோ நிறுவனம் களத்தில் இறங்கியது முதல் வோடபோன், ஐடியா போன்ற பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை கைவசம் வைத்துக்கொள்வதற்காக கடும் போட்டியை சந்தித்தது.

இருப்பினும் ஜியோவின் இலவச டேட்டா மற்றும் இலவச வாய்ஸ் கால்ஸ் என்று அதிரடி சலுகைகளால் பெரும்பாலானோர் மற்ற நெட்வொர்க் சேவையிலிருந்து ஜியோவிற்கு மாறினர்.

இந்த நிலையில், ஏர்செல் நிறுவனமும் தன்னுடைய வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் வைத்துக்கொள்ள பல்வேறு அதிரடி சலுகையை வாரி வழங்கியது.

இதனால் இறுதியில் பெரும் நஷ்டத்தை சந்தித்த ஏர்செல் நிறுவனம் குறிப்பிட்ட ஆறு மாநிலங்களில் தனது சேவையை நிறுத்தவுள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது.


அந்த ஆறு மாநிலங்களாவது, குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசம் மேற்கு ஆகிய இடங்களில் தான் ஏர்செல் சேவை நிறுத்தப்படுகிறது.

இந்த பகுதிகளில் உள்ள 40 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் டெலிகாம் சேவை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. சேவை நிறுத்தப்படுவதால் இந்த வாடிக்கையாளர்கள் அனைவரும் பிற நெட்வொர்க்கிற்கு மாறிக் கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த மாநிலங்களிலுள்ள ஏர்செல் வாடிக்கையாளர்களிடம் இருந்து வரும் கோரிக்கையை 2018 மார்ச் 10 ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், அதுவரையிலும் ஏர்செல் சேவை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இம்மாநிலங்களில் சேவை துண்டிக்கப்படுவதால் தமிழ்நாட்டில் ஏர்செல் சேவை எந்த விதத்திலும் பாதிப்பு அடையாது. என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்செல் தோளைத் தொடர்பு நிறுவனமானது கடுமையான நஷ்டத்தை சந்தித்தால் தான் மிகச் சிறந்த சேவையை தங்களால் வழங்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளது.-Source: seithipunal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!