ஜென்ம சனியின் பிடியில் சிக்கியுள்ள தனுசு ராசிக்காரர்கள் எதில் ஜாக்கிரதையாக இருக்கணும்..?


சனிப்பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கப்படி ஜனவரி மாதமே வருகிறது வாக்கிய பஞ்சாங்கப்படி இந்த ஆண்டு கடைசியில் டிசம்பரில் தமிழுக்கு மார்கழியில் வருகிறது. இந்த முறை மட்டும் இரு பஞ்சாங்கம் இடையே இவ்வளவு வித்தியாசம் வருவதால் எப்போது சனிப்பெயர்ச்சி எதை முறையாக எடுத்துக்கொள்வது என மக்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

திருநள்ளாறு கோயிலில் வாக்கிய பஞ்சாங்கம் சொல்லும் நாளில்தான் சனிபெயர்ச்சி விழா நடத்துவர். எல்லா சனி சன்னதிகளிலும் 19.12.2017 அன்றுதான் சனிபெயர்ச்சி.திருக்கணிதம் எனும் திருத்தப்பட்ட பஞ்சாங்க அடிப்படையில் சனி அதற்கு முன்பாகவே அதிசாரமாக தனுசு ராசிக்கு செல்கிறார் 26.1.2017முதல் சனி தனுசு ராசிக்கு அதிசாரமாக வந்துவிட்டார்.


திருக்கணிதப்படி முறையான சனி பெயர்ச்சி 25.10.2017 அன்று வருகிறது… என்பதை கவனத்தில் வைக்கவும். அதுவரை அதிசாரத்தில் மட்டுமே சனி தனுசுக்கு வருகிறார். அதிசாரம் எனப்படுவது இதற்கு நேர் மாறாக ஒரு கிரகம் முன்னோக்கிப் போவது போன்ற தோற்றத்தை தருவதாகும்.

வாக்கிய பஞ்சாங்கப்படி இப்போது விருச்சிகத்தில்தான் சனி நிலையாக இருக்கிறார்… 19.12.2017 அன்று சரியாக தனுசு ராசிக்கு சென்றிருக்கிறார். இருப்பினும் ஒரு காலை மட்டும் வீட்டுக்குள் வெச்ச மாதிரி சனி தனுசு ராசிக்கு அதிசாரமாக வந்துவிடுவதால் சனிப்பெயர்ச்சியாக எடுத்துக்கொண்டு பலன்கள் பார்க்கலாம்.


இதுவே அக்டோபர் மாதம் திருக்கணித பஞ்சாங்கப்படி சனி
சனியால் உண்டான பாதிப்புகள் குறைய,சனிக்கிழமை காகத்துக்கு சாதம் வைத்து விரதம் இருத்தல், ஊனமுற்றோர்க்கு உதவுதல், முதியோர்க்கு அன்னதானம், வஸ்திர தானம், சொர்னதானம் செய்தல் , திருக்கொள்ளிக்காடு, குச்ச்னுர்சனி கோயில் சென்று வழிபட்டு வரலாம்.

சனிப்பெயர்ச்சி பலன்களை பொறுத்தவரை பழைய நூல்களில் 3,6.11ல் சனி வருவதை மட்டுமே நன்மை செய்யும் என சொல்லப்பட்டுள்ளது.மற்ற எல்லா ஸ்தானத்துக்கும் பகை, தீமைதான். அஷ்டம சனி, ஏழரை சனி, கண்டக சனி , விரய சனி, பாத சனி அதிக பாதிப்பை தரும்.

வக்கீலை பார்த்தல்,டாக்டரை பார்த்தல்,கோர்ட் வாசலை மிதித்தல்,போலீஸ் ஸ்டேசன் வாசலை மிதித்தல், வழக்கு, சிறைவாசம், வெட்டியானை பார்த்தல், கொள்ளி வைத்தல், அறுத்தல், கிழித்தல், தையல் போடுதல் எல்லாம் சனியால்தான் நடக்கிறது. குரு மங்கள் காரியம்.சனி அசுப காரியம். அதனால்தான் சனிப்பெயர்ச்சியை கண்டு மிரட்சியடைகிறோம்.

ஜாதகத்தில் கிரகங்களின் பலத்தை பொறுத்துதான் சனியோ ,குருவோ பலனை தர முடியும்.கண்டக சனி நடக்கும்போது ஆறுக்குடையவன் திசை நடந்தால் ஆபரேசன் நடக்கும்.அஷ்டம சனி,ஏழரை சனி நடக்கும்போது ஜாதகத்தில் எட்டுக்குடையவன் திசை நடந்தால் நஷ்டத்தை சந்தித்தாக வேண்டும். வழக்கை சந்தித்தாக வேண்டும்.
அஷ்டம சனி,ஏழரை சனி நடக்கும்போது யோகமான திசாபுத்தி நடந்தால் கல்யாணம், காதுகுத்து, வீடுகட்டுதல் என சுப செலவாக மாற்றி சுப விரயமாக ஏழரை சனி மாற்றி விடும்.


தனுசு, கன்னி, விருச்சிகம், ரிசபம், மகரம் ராசி குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் கைக்குழந்தைகளாக இருந்தால் அவர்களுக்கு சளி,காய்ச்சல்,வயிற்றுப்போக்கும் குழந்தையின் தாய்க்கு உடல் பாதிப்பும்,தந்தைக்கு பண விரயமும் அதிகமாக இருக்கும்.

12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்றால் சனி இருக்கும்போது படிப்பில் கவனம் குறையும். குறும்புத்தனம் அதிகமாக இருக்கும் எதையாவது உடைப்பது, நெருப்பில் சுட்டுக்கொள்வது, மின்சாரத்தை தொடுவது, கீழே விழுந்து அடிபடுதல், காய்ச்சல் மற்றும் சீசன் நோய்கள் உடனே பாதிக்கும். குழந்தைகளை நொந்து கொள்ளாதீர்கள். பக்குவமாக நடந்து கொள்ளுங்கள்.

பருவ வயது குழந்தைகள் என்றால் 21 வயதுக்குள் எனில் புதிய நண்பர்கள் சேர்க்கை, கெட்ட சகவாசத்தால் கெட்ட பழக்கங்களை கற்றுக்கொள்வர். வீண் வம்பை விலை கொடுத்து வாங்குவர். அடுத்தவர் செய்த தப்பு இவர்கள் மேல் விழும். பக்கத்து வீட்டாரோடு சண்டையிடும் நிலை வரும். புது பாய்பிரண்ட் ,கேர்ள் ப்ரெண்டு கொடுத்து, கெடுத்து வைக்கும். கவனமாக கண்காணியுங்கள்.


40 வயதுக்கு மேல் இருக்கும் தனுசு, ரிசபம், விருச்சிகம், மகரம் ராசியினர் மற்றும் கன்னி ராசியினர் உடல்நலனில் அதிக கவனம் வைக்கவும். முழு செக்கப் செய்து கொள்ளுங்கள்… உணவு விசயத்தில் கவனம் தேவை.

சுகர், பிரஷர் போன்ற மருத்துவத்துக்கு கட்டுப்படாத நோய்கள் உண்டாகும் காலம். நடுத்தர வயதினர் குடும்பத்தினரிடம் அனுசரித்து போங்கள். வாகனத்தில் செல்கையில் கவனம் தேவை. குடிப்பழக்கம் இருப்பவர்கள் அதிக கவனமுடன் இருங்கள்.

குடிப்பழக்கத்தை குறைத்துக்கொள்ளுங்கள்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!