தாலியை கழட்டி வச்சதுக்கு இது தான் காரணம்… மது ஓபன் டாக் .!


பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மது பிக் பாஸ் வீட்டில் தனது அனுபத்தை பகிர்ந்து உள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் மதுவிற்கு பெரிய அளவில் மக்கள் மத்தியில் ஆதரவு இருந்த நிலையில் அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

அவரின் வெளியேற்றத்திற்கு எந்த ஒரு விளக்கமும் தொலைக்காட்சி தரப்பில் இருந்து அளிக்கப்படவில்லை.

அவர் வெளியேறி நீண்ட நாட்கள் கழித்து தற்போது பேட்டி அளித்து வருகிறார். மது முதலில் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக வருவதில் விருப்பம் இல்லாமல் இருந்தாராம்.

ஆனால், அவர்கள் திருப்ப திருப்ப அழைக்கவே எனது கணவரின் அனுமதியுடன் கலந்து கொண்டேன் என்றும், பாத்திமா மேடம் எனக்கு மக்கள் ஆதரவு அதிகமாக இருக்கு என்று சொன்னார்கள்.

அவர் அப்படி சொன்னதும் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் என்னை டார்கெட் செய்ய தொடங்கி விட்டார்கள்.

மேலும், எனக்கு திருமணம் முடிந்து 3 மாதங்களே முடிவடைந்த நிலையில், தாலி இல்லாமல் நான் வர மாட்டேன் என்று கூறியதற்கு, பிக் பாஸ் நிகழ்ச்சியில் சில டாஸ்க் அளிக்கப்படும்.

அதில் எதுவும் நடந்து தாலி அறுந்து விட்டால் உங்களுக்கு கஷ்டமாக இருக்கும் என்று சொன்னார்கள் அதனால் தாலி இல்லாமல் கலந்து கொண்டேன்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி தற்போது முழுதாக உடல் நலம் பெற்றுளேன் சிறிது சிறிதாக மனநிலையும் சரியாகி வருகிறது என்றும் தெரிவித்தார்.-Source: kalakkal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!