உலகின் மிகப்பெரிய வளைந்த மாணிட்டர் சாம்சங் நிறுவனத்தால் இந்தியாவில் அறிமுகம்…!


உலகின் மிகப்பெரிய வளைந்த மாணிட்டர் சாதனத்தை சாம்சங் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
உலகின் மிகப்பெரிய வளைந்த மாணிட்டரை சாம்சங் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

49-இன்ச் அல்ட்ரா-வைடு வளைந்த கேமிங் மாணிட்டர் (LC49HG90) 32:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் 3840×1080 இரட்டை ஃபுல் எச்டி ரெசல்யூஷன் கொண்டுள்ளது.

இந்த மாணிட்டர் 1800R கர்வேச்சர், அல்ட்ரா-வைடு 178 கோணத்தில் பார்க்கும் வசதி மற்றும் ஆக்சிலரேடெட் ரீஃப்ரெஷ் ரேட் மற்றும் 1 ms மோஷன் பிக்சர் ரெஸ்பான்ஸ் டைம் மற்றும் மேம்படுத்தப்பட்ட நான்கு-சேனல் ஸ்கேனிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.


இந்த மாணிட்டர் மோஷன் பிளர் டிடெடர் மற்றும் அதிக துல்லியமான புகைப்படங்களை திரை முழுக்க ஒளிர செய்யும். இத்துடன் எச்டிஆர் (ஹை டைனமிக் ரேன்ஜ்) தொழில்நுட்பம் வழங்கப்பட்டிருக்கிறது.

இதனால் வீடியோ மற்றும் புகைப்படங்களை அதிக துல்லியமாக பார்க்க முடியும். இத்துடன் குவாண்ட்டம் டாட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டிருப்பதால் சிறப்பான ஒளி செயல்திறன் மற்றும் அகலமான கலர் ஸ்பெக்ட்ரம் வழங்குகிறது.

ஐ சேவர் மோட் மற்றும் ஃப்ளிக்கர் ஃப்ரீ தொழில்நுட்பம் கொண்டிருப்பதால் கண்களுக்கு இதமான அனுபவத்தை வழங்கும். இந்த மாணிட்டரின் ஐ தேவர் மோட் திரையில் உள்ள நீல நிற ஒளிகற்றைகளை கருவிழிக்கு நிறங்களை மிகவும் துல்லியமாக வெளிப்படுத்தும், இதனால் திரையை பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு கண் சோர்வு ஏற்படாமல் இருக்கும்.

சாம்சங் 49-இன்ச் அல்ட்ரா-வைடு வளைந்த கேமிங் மாணிட்டர் இந்தியாவில் ரூ.1,50,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்கள் இதனை சாம்சங் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும் ஆஃப்லைன் முறையில் அனைத்து விற்பனையகங்களிலும் விரைவில் விற்பனைக்கு வரயிருக்கிறது. – Source : maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!