2018 மார்ச்சுடன் முடிவுக்கு வரப்போகும் கூகுள்… ஏன் தெரியுமா?


உலகின் பிரபல தேடுபொறியாக விளங்கும் கூகுள் நிறுவனமானது, பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு உலகிற்கு புதிய தொழிநுட்பங்களை அறிமுகம் செய்து வருகின்றது.

இதன் வரிசையில், டாங்கோ(Tango) எனும் திட்டத்தினை கடந்த 2014 இல் ஆரம்பித்திருந்தது. இத் திட்டம் கெமராக்களின் புதிய புரட்சியை ஏற்படுத்தக் கூடிய ஒரு திட்டமாகக் கருதப்பட்டது.


அதாவது அசைவு மற்றும் ஆழங்களை துல்லியமாக கணிக்கக் கூடிய கெமராக்களை இத் திட்டத்தினூடாக உருவாக்கி அறிமுகம் செய்ய கூகுள் நிறுவனம் முயற்சித்து வந்தது.

எனினும் இத் திட்டத்தினை 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவுக்கு கொண்டு வர தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நவீன ஸ்மார்ட் போன்கள் மற்றும் மடிக்கணினிகளின் கண்கள் என அழைக்கப்பட்ட இக் கெமராக்கள் முழுமையான வெற்றியினைப் பெறாமையினாலேயே முடிவுக்குக் கொண்டு வரப்படுகின்றதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. – Source : lankasee

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!