திடீரென பழைய ஐபோன்களின் வேகம் குறைய இது தான் காரணமாம்..!


பழைய ஐபோன்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களது ஐபோனின் வேகம் திடீரென குறைந்து விட்டதாக குற்றம் சாட்டினர். மேலும் பழைய ஐபோன் வேகத்தை அதிகரிக்க அவற்றின் பேட்டரியை மாற்ற வேண்டும் என்றவாரு தகவல்கள் வலைத்தளங்களில் வெளியாகி வந்தது. எனினும் இதன் உண்மைய நிலையை அறிந்து கொள்ள கீக்பென்ச் நிறுவனர் முடிவு செய்திருந்தார்.

ஐபோன் 6S பயன்படுத்தும் ரெடிட் வாடிக்கையாளர் தனது ஐபோனில் 40% சார்ஜ் இருந்தும் ஸ்விட்ச் ஆஃப் ஆனதாக தெரிவித்திருந்தார். இந்த பிரச்சனையை சரி செய்ய ஆப்பிள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய பேட்டரிகளை மாற்றி கொடுத்தது, எனினும் சில வாடிக்கையாளர்களுக்கு இதே பிரச்சனையை சந்தித்தனர்.

பின் மென்பொருள் அப்டேட் மூலம் இந்த பிரச்சனை சரி செய்யப்படும் என ஆப்பிள் தெரிவித்திருந்தது. ஐ.ஓ.எஸ். 10.2.1 அபேடேட் வெளியானதை தொடர்ந்து ஐபோன் 6 ஸ்மார்ட்போனில் ஆஃப் ஆகும் பிரச்சனை 80% முதல் 70% வரை குறைந்திருந்ததாக தெரிவித்துள்ளது. ஐ.ஓ.எஸ். 10.2.1 இயங்குதளம் பிராசஸரின் கிளாக் வேகத்தை குறைத்ததாக ரெடிட் வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.


கீக்பென்ச் சோதனைகளில் ஐபோன் 6S மாடல்களில் பிரச்சனை இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனினும் ஐ.எ.எஸ். 10.2.0, 10.2.1 அல்லது 11.2.0 பதிப்புகளில் பிராசஸர் வேகம் குறைக்கப்பட்டதால் பிரச்சனை குறைந்தது. ஐ.ஓ.எஸ். 10.2, ஐ.ஓ.எஸ். 10.2.1 மற்றும் ஐ.ஓ.எஸ். 11.1.2 இயங்குதளங்களை பயன்படுத்தும் ஐபோன் 7 எவ்வித பிரச்சனையையும் சந்திக்கவில்லை, எனினும் ஐ.ஓ.எஸ். 11.2.0 பயன்படுத்தும் சாதனங்களில் பிரச்சனை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மென்பொருள் மாற்றப்பட்டு பிராசஸர் வேகம் குறைக்கப்பட்டதால், ஐபோன் பேட்டரி பயன்பாடு குறைந்தது. இதனால் ஐபோன் திடீரென ஷட் டவுன் ஆவது தவிர்க்கப்படுவதாக கீக்பென்ச் நிறுவனர் ஜான் பூலெ தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் ஐபோனின் வேகம் குறைய பேட்டரியை தவிர்த்து சி.பி.யு. தான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஆப்பிள் வேண்டுமென்றே சி.பி.யு. வேகங்களை குறைக்க செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. புதிய பிழை சரி செய்யப்பட்டிருப்பதால் வாடிக்கையாளர்கள் தங்களது போனின் வேகம் குறைவாக இருப்பதால் அவற்றை மாற்ற வேண்டும் அல்லது போனின் பேட்டரியை மாற்ற வேண்டும் என்ற வகையில் வாடிக்கையாளர்களை நினைக்க தூண்டலாம் என பூலெ தெரிவித்துள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!