ஆக்ஷன்கிங் கமலின் முன்னாள் மேனேஜருக்கு செய்த வேலை என்ன தெரியுமா?


மீடியா ஆலோசகர், திரைப்பட ப்ரோமோட்டர், திரைப்பட செய்தியாளர், செலிபிரிட்டி மேனேஜர் என்று பல தொழில்களை செய்பவர் திரு. நிகில் அவர்கள். இவர் உலகநாயகன் கமலிடம் மேனேஜராக பணிபுரிந்தவர். இவரின் சட்டையைத்தான் பிடித்து அடிக்க சென்றுவிட்டார் நடிகர் அர்ஜுன். இந்த சர்ச்சை வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாக பரவி வருகிறது. என்னவானது எதற்காக சட்டையை பிடித்தார் என்ற விபரங்களை வாருங்கள் பாப்போம்.

ரகசிய மீட்டிங்:

நடிகர் அர்ஜுன் திடீரென்று ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி ஆலோசனை செய்ய மீடியா ஆலோசகரான நிகில் அவர்களை அழைத்துள்ளார். நிகிளுடன் அவரது தோழரான கிரண் என்பவர் உடன் வந்துள்ளார். முதலில் இவர்கள் பேசுவது மிகவும் ரகசியமாக மெதுவான குரலில் பதிவாகியுள்ளது. எதை பற்றி பேசுகிறார்கள் என்பதை முதலில் தெளிவாக கிரகிக்க முடியவில்லை.

அரசியல் பிரவேசம்:
பிறகு இருவரும் பேசுவதில் இருந்து அர்ஜுன் தனது அரசியல் பிரவேச அறிவிப்பு பற்றி பேசுகிறார் என்பது புரிகிறது. அதற்கான ஆலோசனைகளை நிகில் அர்ஜுனுக்கு வழங்குகிறார்.

இடையில் நிகிளின் தோழர் கிரண் அர்ஜுனுக்கு தெரியாமல் அதனை வீடியோ எடுக்கிறார். இதனை கவனிக்காத அர்ஜுன் அரசியல் கொடி நிறம் குறித்தும் அறிவிப்பை ரசிகர்களிடம் வெளியிடலாமா அல்லது பத்திரிக்கையாளர்களை சந்தித்து வெளியிடலாமா என்று நிகிலிடம் ஆலோசனை கேட்கிறார்.


திருட்டு வீடியோ:
இடையே கிரண் வீடியோ எடுப்பதை சற்றே கவனிக்கும் அர்ஜுன் அதனை தெரியாதவாறு நிகிலிடம் ஆலோசனையை தொடர்கிறார். திடீரென்று நிகிலின் சட்டையை பிடித்து அத்தேரிக்க என்னும் வார்த்தையை கூறி நிகிலை பிடித்து இழுக்கிறார், அதோடு நில்லாமல் பல்லை கலட்டிருவேன் ராஸ்கல் என்று கோவப்படுகிறார் அர்ஜுன்

கிளைமாக்ஸ்:
அதன் பின் சிரித்துக் கொண்டே காமிராவை பார்த்து இது எல்லாம் செட்டப், உண்மையில் நாளை எனது மகளை வைத்து நான் எடுத்துக்கொண்டிருக்கும் சொல்லிவிடவா படத்தின் டீசர் வெளியாகிறது இந்த டீசரை ப்ரொமோட் செய்வதற்கு நிகில் கொடுத்த ஐடியாதான் இது என்று புன்னகையுடன் கூறுகிறார்.

நடிகர் அர்ஜுனின் மகளான நடிகை ஐஸ்வர்யா பட்டத்து யானை என்னும் படம் மூலம் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இவர் தற்போது தந்தை அர்ஜுன் அவர்கள் இயக்கத்தில் சொல்லிவிடவா என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் கன்னடத்தில் பிரேம பாரஹா என்ற பெயரில் ஒரே நேரத்தில் தயாராகி வருகிறது.

காதலின் பொன் வீதியிலே என்னும் தலைப்பை மாற்றி தற்போது சொல்லிவிடவா என்று வைத்துள்ளார் நடிகரும் இயக்குனருமான அர்ஜுன் அவர்கள். பட ப்ரோமோசன்காக சன் டிவி விஜய் டிவி ரியாலிட்டி ஷோ ரேஞ்சுக்கு வந்துவிட்டார்கள் இவர்களும் என்று பொருமுகிறார்கள் வலைதளவாசிகள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!