டூத் பேஸ்ட்டை பயன்படுத்தினால் அசிங்கமான பருக்கள் உடனடியாக மறையும் என தெரியுமா ?


முகத்தில் பருக்கள் வருவது சாதரணமானது தான் ஆனால் அதனைப் போக்க படும் பாடு தான் பெரும் பாடாக இருக்கிறது. அதோடு பருக்கள் வருவதால் ஏற்படும் தழும்புகள் நம்மை கவலையில் ஆழ்த்தும் விஷயமாகவே இருக்கிறது.


சந்தையில் கிடைக்கும் எண்ணற்ற ப்யூட்டி ப்ராடெக்ட்களுக்கு மத்தியில் வீட்டிலேயே செய்யக்கூடிய பல குறிப்புகளை பின்பற்றியும் முகத்தில் இருக்கும் பருக்கள் போகவில்லையா? அல்லது இவை எல்லாம் செய்து பார்க்க எனக்கு நேரமில்லை எனக்கு உடனடி ரிசல்ட் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்படியானால் டூத் பேஸ்ட்டை பயன்படுத்தலாம்.

ஆம், நீங்கள் தினமும் பல் விளக்க பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டைக் கொண்டும் முகத்தில் தோன்றும் பருக்களை சரி செய்ய முடியும்.


ஏன் டூத் பேஸ்ட் ? :

பெரும்பாலும் அனைத்து வகையான டூத் பேஸ்ட்டில் பேக்கிங் சோடா சேர்க்கப்பட்டிருக்கும். இவை உங்கள் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்க பெரிதும் உதவுகிறது. அதோடு சருமத்தில் நிற வேறுபாட்டினையும் ஒரே மாதிரி சமன் செய்ய உதவுகிறது.

டூத் பேஸ்ட்டில் இருக்கும் ஹைட்ரோஜன் பெர்ராக்சைட் சருமத்தை பாக்டீரியா தொற்றிலிருந்து பாதுகாக்கும். இதனால் பருக்கள் வருவது தவிர்க்கப்படும். அதேபோல இதிலிருக்கும் மென்தால் பருக்களால் ஏற்ப்பட்ட தழும்பினை போக்க உதவுகிறது.

டூத் பேஸ்டில் இருக்கக்கூடிய மூலப்பொருட்களான triclosan, benzoyl peroxide, salicylic acid போன்றவை பல அழகு சாதனப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது.


காரணம் என்ன? :

பருக்கள் தோன்றுவதற்கு என்ன காரணம் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். முகத்தில் கொழுப்பு அதிகமாக வெளியேறுதல், கிருமித் தொந்தரவு, ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு, ஒரு சில மருந்துகளால் பரு வரலாம்.

அதிகக் கொழுப்பு சேர்ந்த உணவு வகைகளைச் சாப்பிடுவதும் இதற்குக் காரணம். சரியாக தூக்கம் இல்லாதது, அதிக எண்ணெயில் பொறித்த உணவுகளை சாப்பிடுவது, முகத்தை சரியாக பராமரிக்காமல் இருப்பது போன்றவை தான் முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.


கிள்ளுவது ஆபத்து

பலரும் பருக்கள் தோன்றியவுடன் அதனை கிள்ளுவது வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இது சரியான செயல் கிடையாது. கைகளால் நெருடிக் கிள்ளிவிடப்பட்ட பருவின் சீழ் அகன்றவுடன் தோலில் ஒரு பள்ளம் ஏற்பட்டு வடுவாக, நிலைத்து விடும். அடிக்கடி பருக்களைத் தொடுவதாலும் அழுத்துவதாலும் அவை பெருத்து ஆழமாக ஆகிவிடுவதும் உண்டு.

பருக்களைக் கிள்ளுவது தவறு. நெருடாமல், தொடாமல் இருந்தால் பருக்கள் வடுவின்றித் தாமே மறைந்துவிடும்.


பேஸ்ட் மற்றும் தேன் :

டூத் பேஸ்ட்டின் அடிப்படையாக குளிர்ச்சி வாய்ந்தது. பொதுவாக நம் சருமத்திற்கு பயன்படுத்த என்று எதை வாங்கினாலும் அதிகம் கெமிக்கல் சேராத பொருட்களை வாங்குங்கள். சில நேரங்களில் நாம் தொடர்ந்து சருமத்தில் பயன்படுத்துவதால் அவற்றால் சருமத்தில் அலர்ஜி ஏற்ப்படவும் வாய்ப்புண்டு.

ஒரு கிண்ணத்தில் ஒரு பின்ச் டூத் பேஸ்ட்டுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். அவற்றை முகத்தில் பருக்கள் அல்லது தழும்புகள் உள்ள இடத்தில் பூசுங்கள். சுமார் 20 நிமிடங்கள் கழித்து கழுவிவிடலாம்.


க்ரீன் டீ :

சிலருக்கு பரம்பரையாகவே முகத்தில் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் தோன்றிடும். இப்படி பரம்பரையாக தோன்றும் பருக்களையும் நீக்கும் ஆற்றல் க்ரீன் டீக்கு இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இது இன்ஸுலின் அளவைக் குறைக்கிறது . இதனை குடிப்பதால் சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதை தடுக்க முடியும்.

டூத் பேஸ்ட்டுடன் க்ரீன் டீ பவுடர் அல்லது க்ரீன் டீ தயாரித்து ஒன்றாக கலந்து பேஸ் மாஸ்க்காக போடலாம். சுமார் 30 நிமிடங்கள் வரை காத்திருந்து நன்றாக காய்ந்த பிறகு கழுவலாம்.


பட்டை மற்றும் மஞ்சள் :

பட்டை மற்றும் மஞ்சளில் இருக்கும் மூலப்பொருட்கள் பருக்கள் தோன்ற காரணமாக இருக்கும் பாக்டீரியாவுடன் போராட வல்லது. அரை டீஸ்ப்பூன் டூத் பேஸ்ட்டுன் கால் டீஸ்ப்பூன் பட்டைத் தூள் மற்றும் அரை டீஸ்ப்பூன் மஞ்சளும் கலந்து பேஸ்ட்டாக முகத்தில் அப்ளை செய்ய வேண்டும்.

இதனை வாரம் ஒரு முறை செய்யலாம். இவை பருக்களை மட்டுமல்ல பருக்களால் ஏற்படும் தழும்புகளையும் போக்க வல்லது.


பூண்டு :

முதலில் பூண்டினை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். டூத் பேஸ்ட்டுடன் நீங்கள் தயாரித்து வைத்திருக்கும் பூண்டு சாறினை கலந்து பருக்கள் உள்ள இடத்தில் தேய்க்கலாம். பூண்டு சாறு கலந்திருப்பதால் கலவை பூசிய இடங்கள் எரிச்சலைத் தரும். அதோடு பூண்டு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டுள்ளதால் சிலருக்கு அதிக எரிச்சல் இருக்கலாம்.

பத்து நிமிடங்களில் இதனை குளிர்ந்த நீரினால் கழுவிடுஙகள்.

தயிர் :

அழகுக்கு மட்டுமல்ல உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது இந்த தயிர். தயிரில் அதிகப்படியான லேக்டிக் அமிலம் இருக்கிறது. இவை பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாவை அழிப்பதில்வல்லது. அதோடு சருமத்தின் நிறமாற்றங்களையும் சமன் செய்ய உதவிடும்.

டூத் பேஸ்ட்டுடன் ஒரு ஸ்பூன் தயிர் கலந்து அதிக சூரிய ஒளி படுகின்ற இடங்களில் இடங்களில் பூசுங்கள். கைகளில் பயன்படுத்தும் போது இந்தக் கலவையுடன் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.


வேப்பிலை :

வேப்பிலையில் இருக்கும் சத்துக்கள் பாக்டீரியாவை போக்கும் ஆற்றல் கொண்டது. வேப்பிலையை அரைத்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள்.அத்துடன் ஒரு ஸ்பூன் டூத் பேஸ்ட் கலந்து முகம் முழுவதும் தடவி அரை மணி நேரம் காத்திருந்து முகத்தைக் கழுவிவிடுங்கள்.

வாரத்தில் இரண்டு முறை இப்படிச் செய்வதனால் சிறந்த பலன் உங்களுக்கு கிடைக்கும்.


ரோஸ் வாட்டர் :

உடலில் அதிக சூடு இருந்தாலும் பரு தோன்றிடும். டூத் பேஸ்ட்டுடன் ரோஸ்வாட்டர் கலந்து அந்த கலவையை முகத்திற்கு பூசி வர பருக்கள் மறைவதுடன் முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.


வெந்தயம் :

முதல் நாள் இரவே சிறிதளவு வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் வெந்தயம் ஊறிய தண்ணீரில் அரை ஸ்பூன் அளவு டூத் பேஸ்ட்டை கலந்து முகத்திற்கு பூசினால் பருக்களினால் உண்டாகும் தழும்பினை மறைய வைக்க முடியும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!