AK58-ல் அவர் தேவையில்லை… தலயா அப்படிச் சொன்னார்… நம்ப முடியவில்லை…!


விவேகம்’ படத்தை தொடர்ந்து அஜித் அடுத்து நடிக்கும் படத்தையும் சிவாவே இயக்குகிறார் என்று கடந்த சில வாரமாகவே செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தது. இந்த செய்திகள் ஏறக்குறைய தற்போது உறுதியாகிக் கொண்டிருக்கிறது.


அஜித்குமாரின் 58-ஆவது படமாக உருவாகவிருக்கும் இந்தப்படத்தையும் ‘விவேகம்’ படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. விவேகம் படத்தினால் விநியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் பல ஏரியாக்களில் நஷ்டமடைந்துள்ளனர்.


அந்தப் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமும் பணத்தை இழந்துள்ளது. இந்த நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காகவே சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துக்கு மீண்டும் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் அஜித்.


மேலும், படம் வெளியான பிறகுதான் சம்பளம் வாங்கவுள்ளார் என்ற தகவலும் பரவிவருகிறது. அஜித்தும் சிவாவும் நான்காவது முறையாக இணையும் இந்தப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார்.


விவேகம் படத்தில் அனிருத்தின் இசை எடுபடவில்லை. எனவே அனிருத் வேண்டாம் என அஜித்தே கோரிக்கை வைத்துள்ளார். ஜனவரி மாதம் தொடங்கும் இப்படத்தை அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!