அனுமனுக்கு வெண்ணெய் சாத்தி வழிபடும் முறை எப்படி வந்தது தெரியுமா..?

ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தி வழிபடும் முறை வந்ததற்கான காரணத்தை விரிவாக அறிந்து கொள்ளலாம்.

ராவணனுடன் நடந்த போரில், அனுமன் கடுமையாக போரிட்டார். அவர் தன்னுடைய இரு பக்க தோள்களிலும், ராமபிரானையும், லட்சுமணரையும் தூக்கி வைத்துக் கொண்டார். அப்போது ராவணன் விடுத்த பல அம்புகளை தன்னுடைய உடலில் தாங்கிக் கொண்டாராம் ஆஞ்சநேயர்.


அதனால் அவரது உடலில் காயங்கள் நிரம்பியிருந்தது. அந்த காயங்கள் தந்த எரிச்சலை கட்டுப்படுத்துவதற்காக, குளிர்ச்சியான வெண்ணெயை அனுமனுக்கு பூசியதாக கூறப்படுகிறது. இதனால்தான் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தி வழிபடும் முறை வந்ததாக சொல்கிறார்கள்.-Source:maalaimalar.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!