பசிச்சா எலிகளை புடிச்சி வறுத்து சாப்பிடுவோம் சார்.. அதிர வைக்கும் சிறுவர்கள்.!


“நாங்க எலிகளை புடிச்சி வறுத்து அப்படியே சாப்பிடுவோம் சார்..” என்று சொல்லும் சிறுவர்களின் பேச்சை கேட்டு வெளியூர்வாசிகள் திகைத்து போய் நிற்கிறார்கள்.

திருப்பூரை அடுத்த பல்லடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மங்களம் அருகே உள்ளது வேலம்பாளையம். இப்பகுதியில் கல்குவாரிகள் அதிகம். அதனால் இங்கு கூலித்தொழிலாளர்களும் அதிக எண்ணிக்கையில் வசித்துவருகின்றனர்.

இவர்கள் காலையில் வேலைக்கு சென்றுவிட்டால், சாயங்காலம் தான் வீடு திரும்புவது வழக்கம். இதனால் இவர்களது குழந்தைகளை யாருமே கவனிப்பதும் இல்லை, அவர்களை முறையாக பராமரிப்பதும் இல்லை.

அப்பா, அம்மா வேலைக்கு போய்விடுவதால் இந்த பிள்ளைகளும் ஸ்கூலுக்கு போவது கிடையாதாம். இந்த கல்குவாரியை ஒட்டி விவசாய நிலங்களும் உள்ளன. அந்த வயல்வெளிகளுக்கு சிறுவர்கள் சென்றுவிடுகிறார்கள்.


அங்கு ஓடியாடும் எலிகளை துரத்தி பிடிக்கிறார்கள். அந்த எலிகளையும் அங்கேயே கொன்று அதனை சமைத்து சாப்பிடுகிறார்கள். இதனை அப்பகுதி மக்கள் யாருமே கண்டு கொள்வதில்லை என்று தெரிகிறது.

இதை யாரோ ஒருவர் வீடியோ எடுத்ததுடன், ஒரு சிறுவனையும் கூப்பிட்டு கேட்கிறார். இந்த எலிகளை பிடித்து என்ன செய்வீர்கள் என்று. அதற்கு அந்த சிறுவன், “அப்படியே வறுத்து சாப்பிடுவோம்” என்று வெள்ளை சிரிப்புடன் சொல்கிறான். இது போன்று எலிகளை பிடித்து கொன்று சாப்பிட்டால் எத்தனையோ விதமான நோய்கள் தொற்றிக்கொள்ள வாய்ப்புள்ளது.

இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு மேற்படி மங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிறப்பு குழுக்களை அமைத்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!