மீராவுக்கு சேரனை முன்பே தெரியுமா? – வைரலான பழைய புகைப்படம்..!


இயக்குனர் சேரனுடன் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் மீரா மிதுன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

தற்போது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களாக சேரன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என மீரா மிதுன் கூறிய குற்றச்சாட்டு ரசிகர்களிடையே அவர்மீது அதிருப்தியை ஏற்பட்டு அவருக்கு குறைவான வாக்குகளே கிடைத்துள்ளது. மேலும், அவர் நடிக்கிறார் என பிக்பாஸ் சக போட்டியாளர்கள் கருதியதால் மீரா கண்ணீரை விட வேண்டியிருந்தது.


இந்நிலையில், மீராவும், சேரன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. எனவே, பிக்பாஸ் வீட்டிற்கு வரும் முன்பே ஒருவரை ஒருவரை தெரியும் என கருதப்படுகிறது. அப்படி இருந்தும் சேரன் மீது ஏன் மீரா அப்படி ஒரு புகாரை தெரிவித்தார் என்பது தெரியவில்லை?

இருவரில் ஒருவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின்பே இதற்கான விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீரா மிதுன் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என செய்திகள் கசிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.-Source: cinereporters

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!