4 வயசு குழந்தையின் உயிரைப் பறித்த தண்ணீர்.. கதறும் மக்கள்..!


“4 வயசு குழந்தைங்க.. இந்த தண்ணியை குடிச்சு இப்படி அநியாயமா செத்தே போய்ட்டான்..” என்று பொதுமக்கள் அடிப்படை வசதி செய்து தர கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூரை அடுத்த வாவிபாளையம் படையப்பா நகரை சேர்ந்தவர் நடேசன். இவர் ஒரு பனியன் தொழிலாளி, இவரது 4 வயது மகன் லோகேஷ்.

கடந்த 14 ஆம் தேதி லோகேஷுக்கு அதிக காய்ச்சல் வந்தது. அதனால் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கே காய்ச்சல் சரியாகாத காரணத்தால் கோவையில் அரசு ஆஸ்பத்திரியில் சிறுவனை அனுமதித்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் லோகேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டான். இதனிடையே படையப்பா நகர் பகுதி மக்கள், ஊத்தக்குளி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வாட்டர் பாட்டிலில் அவர்கள் அருந்தும் கலங்கலான குடிநீரை பிடித்து கொண்டு வந்து பார்வைக்கு வைத்தனர்.

பிறகு “குடிநீர், சாக்கடை , என எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை. இதனாலதான் எங்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு வருகிறது. இதை பற்றி எத்தனையோ முறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தோம். ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போ இந்த குழந்தையோட உயிர் அநியாயமா போயிடுச்சு. உயிரிழப்பிற்கு நியாயம் தேவை. அடிப்படை வசதிகளும் எங்களுக்கு உடனடியா தேவை” என்று ஆவேசத்துடன் மறியலின்போது சொன்னார்கள்.

இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்துவிட்டனர். அவர்களிடம் பெண்கள் லிஸ்ட் போட்டு குறைகளை சொல்லி கொண்டே போனார்கள். பிறகு அடிப்படை வசதிகளை செய்து தருவதாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!