டெஸ்ட் போட்டிகளில் டோனியின் 7ம் எண் ஜெர்சி யாருக்கு?

கிரிக்கெட் ரசிகர்களால் உலக கோப்பை கொண்டாடப்படுவதை போலவே, ஆஷஸ் தொடரும் பரவலாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான போட்டி அடுத்த மாதம் 1ம்தேதி தொடங்கி 2020ம் ஆண்டு வரை நடக்க உள்ளது.

முதல் போட்டியில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் வரலாற்றிலேயே முதன்முறையாக ஜெர்சியில் வீரர்களின் பெயர்கள், எண்கள் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆஷஸ் தொடரில் இந்திய அணி, வெஸ்ட் இண்டீசுடன் மோத உள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் வீரர்கள் முதன்முறையாக பெயர்கள், எண்கள் கொண்ட ஜெர்சியினை அணிந்து விளையாட உள்ளனர்.

இந்த போட்டியில் இந்திய அணியின் அனுபவ வீரரான டோனி இடம் பெறவில்லை. இதனால், அவரின் 7ம் நம்பர் ஜெர்சி யாருக்கு? எனும் சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஏற்கனவே, கிரிக்கெட் ஜாம்பவானான டெண்டுல்கர் அணிந்த ஜெர்சியின் 10வது எண்ணை யாரும் எடுக்க மாட்டோம் என வீரர்கள் அனைவரும் கூறினர். இது அவருக்கு சிறப்பு செய்யும்விதமாக அமைந்தது.

இந்நிலையில் டோனியின் ஜெர்சி எண் குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுந்து வருகிறது. இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இந்திய வீரர்கள் ஒருநாள் போட்டிகளில் பயன்படுத்திய எண் கொண்ட ஜெர்சியையே, இந்த டெஸ்ட் தொடரிலும் பயன்படுத்தி விளையாடுவார்கள்.

டோனி, டெஸ்ட் போட்டியில் இல்லாததால் அவரது 7வது எண் கொண்ட ஜெர்சியை யாரும் எடுக்க மாட்டார்கள் என நம்புகிறோம். ஏனென்றால், 7ம் எண் ஜெர்சியை மக்கள் டோனியுடன் மட்டுமே பார்த்துள்ளனர்’ என கூறியுள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!