பீட்சா போட்டியில் வெல்லுங்க.. கல்யாணம் டூ தேனிலவு வரை.. எல்லாமே அவங்க பாத்துப்பாங்க..


திருமண ஆடை முதல் ஹனிமூன் செல்லும் வரை அனைத்திலும் முக்கிய பங்கு வகிக்கும் பீட்சா பேக்கேஜ் தற்போது டிரென்டாகி வருகிறது.

பீட்சா எனப்படும் உணவு வெளிநாட்டினர் உட்கொள்ளும் உணவாகும். இது தற்போது இந்தியாவில், ஏன் தமிழகத்திலும் பரவியுள்ளது. பன்னீர், ஆலிப் பழங்கள், சிக்கன், காய்கறிகள் என விதவிதமான பீட்சாக்கள் கிடைக்கின்றன.

இந்த பீட்சாக்கள் மீது குழந்தைகள் முதல் பெரியோர் வரை பீட்சாவுக்கு மயங்காதவர்களே இருக்க மாட்டார்கள். இந்த நிலையில் அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் உள்ள ஒரு பீட்சா கடை தங்களது தயாரிப்பை உலகளவில் கொண்டு செல்ல ஒரு புதிய யோசனையை அறிமுகப்படுத்தியுள்ளது.

திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகளை தேர்வு செய்து அவர்களுக்கு இந்த நிறுவனம் போட்டிகளை வைக்கும். அந்த போட்டிகளில் வெற்றி பெறும் ஜோடிக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்கிறது. பீட்சாவை பிரபலப்படுத்த அந்த நிறுவனம் செய்துள்ள முயற்சி என்ன தெரியுமா.

மணமகள் அணியும் ஆடை, கேக், உணவு என அனைத்திலும் பீட்சாதான். இவ்வாறு அறிவித்ததும் ஏராளமான ஜோடிகள் போட்டியில் கலந்து கொண்டனர். இதில் ஒரு ஜோடி வெற்றி பெற்றது.

அதில் திருமணப் பெண்ணின் ஆடை முற்றிலும் பீட்சா போல் வடிவமைத்திருந்தது. கேக்கிலும் 6 அடுக்கு பீட்சா கேக். திருமண விருந்தும் பீட்சாதான். திருமணம் நடைபெறும் மொத்த இடமும் பீட்சாவை கருப்பொருளாக கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இது மட்டுமல்லாமல் பீட்சாவில் பூங்கொத்து, தேனிலவு பேகேஜ், 45000 ரொக்கம் ஆகியன வழங்கப்படுகிறது. இந்த போட்டிகள் தற்போது வெளிநாட்டினர் மத்தியில் பிரபலமாகியுள்ளது. பொதுவாக திருமண ஆடை என்பது வெள்ளை நிறத்தில் தரையை தொடும் படி இருக்கும். ஆனால் இதிலும் புதுமையை புகுத்தியுள்ளது இந்த பீட்சா நிறுவனம்.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!