நகைக்கடைக்குள் நுழைந்து ஒருவர் நகை பார்க்க.. இன்னொருவர் பெட்டியை திருடிய அதிர்ச்சி சம்பவம்..!


ஸ்டைலாக நகைக்கடைக்குள் நுழைந்த 2 இளம் பெண்கள்.. கொஞ்ச நேரத்திற்கெல்லாம் நகை பெட்டியையே லவட்டி கொண்டு மாயமானது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்தவர் தருண் குமார். இவர் அப்பகுதியில் எஸ்.எம்.ஜூவல்லரி என்ற நகை கடை வைத்து உள்ளார். இந்த கடையில்தான் திருட்டு நடந்து நடந்துள்ளது. இது சம்பந்தமான சிசிடிவி காட்சியும் வெளியாகி உள்ளது.

கடைக்கு 2 இளம் பெண்கள் நகை வாங்க உள்ளே வருகிறார்கள். ரெண்டு பேருமே நீட்டாக புடவை கட்டிக் கொண்டு, ஸ்டைலாக உள்ளனர். அங்கிருந்த சேரில் இருவரும் உட்கார்ந்திருக்க, கடை ஓனர் தருண்குமார் நகைகளை எடுத்து காட்டி கொண்டிருக்கிறார்.

இரு பெண்களில் ஒரு பெண் நகை வாங்குவது போல பாவ்லா காட்டுகிறார். என்னென்னமோ டிசைனில் நகை காட்டுமாறு கேட்க, தருண்குமாரும் ஒவ்வொன்றாக எடுத்து காட்டினார்.

மற்றொரு பெண்ணோ, செல்போன் பேசிக் கொண்டே, அங்கிருந்த ஒரு நகை பெட்டியை அலேக்காக தூக்குகிறார். பிறகு டக்கென எடுத்து தன்னுடைய ஹேன்ட் பேக்கில் வைத்துவிடுகிறார். இதை தருண்குமார் கவனிக்கவே இல்லை.

இவர்கள் போனதும்தான் அந்த நகை பெட்டியை தேடி உள்ளார் தருண்குமார். அதில், சிறு சிறு பொருட்களாக சுமார் 150 கிராம் நகைகளை வைத்திருக்கிறார். அவை எப்படியும் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்குமாம். இது சம்பந்தமாக போலீசாரிடம் கடை ஓனர் புகார் அளித்ததன்பேரில் விசாரணை ஆரம்பமாகி உள்ளது.

முதல்கட்டமாக, அங்கு பதிவாகி இருந்த சிசிடிவி காட்சியை வைத்து 2 பெண்கள் யார் என்ன என்ற விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதைதவிர 2 பெண்களை பிடிப்பதற்காகவே கொருக்குப்பேட்டை போலீசார் தனிப்படை அமைத்து உள்ளனர்.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!