நம்பிக்கையும் பொறுமையும் தான் பாபாவிடம் காணப்படும் அளவற்ற பொக்கிஷங்கள்..!


கடவுள் ஒன்றுதான். உருவத்திலும், வழிபாட்டிலும் வேறுவேறாக இருந்தாலும் நம்பிக்கை என்பது இறுதியில் ஒன்றின் மீது தான் நிலைக்க வேண்டும். இதை நன்றாக உணர்ந்தவர்கள் பாபா பக்தர்கள். ஒவ்வொரு முறை யும் நெருக்கடியான நேரங்களிலும் இனி செய்ய எதுவுமே இல்லாத சூழ்நிலையி லும் ஆபத்பாந்தவனாக அழையாமலே வருகிறார் பாபா.

பாபாவின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை வார்த்தைகளாலும் அன்பாலும் புரிய வைக்க முடியுமா? உணரும் தருணம் எல்லாமே மனம் முழுக்க பக்தியும் அன்பும் நீக்கமற நிறைந்திருக்கிறதே. இத்தகைய மகானை குருவாக அடைந்தவர்கள் எல்லாமே புண்ணியமிக்கவர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

குருவின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையானது எப்படி இருக்க வேண்டும் என்பதை பாபா தனது பக்தையான சாமாவிடம் ஒருமுறை கூறினார். ஒருமுறை பாபாவிடம் உபதேசம் பெறவேண்டும் என்று பிடிவாதத்தோடு அமர்ந்திருந்த சாமாவுக்கு அந்த அதிர்ஷ்டம் கிட்டியது.

குருவேங்குசா தன்னை சீடனாக ஏற்றுக்கொண்ட கதையைக் கூறினார். சிறுவயதில் நான் என் நண்பர்களிடம் விளையாடிக்கொண்டிருந்த போது வந்த வேங்குசா எங்களுக்கு உணவு கொடுத்தார். எல்லோரும் அதை வாங்கிக் கொண்டு ஓடி விட்டார்கள். ஆனால் நான் மட்டும் அங்கேயே நின்றுக்கொண்டிருந்தேன். அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. என்னை அழைத்துக்கொண்டு அருகில் இருந்த ஆழமான கிணற்றுக்கு அழைத்து சென்றார்.

என் கால்களை கனமான கயிற்றில் கட்டி தலைகீழாக கிணற்றில் தொங்க விட்டு சென்றுவிட்டார். நான்கைந்து மணித்துளிகள் கடந்து இருக்கும். பிறகு வந்து என்னை விடுவித்தார். இந்த உலகம் எப்படியிருக்கிறது என்று கேட்டார்? மிகவும் ஆனந்தமாக இருந்தது என்றேன். பிறகுதான் அவருடைய சீடனாக ஏற்றுக் கொண்டார் என்று தான் சீடனான கதையைக் கூறினார்.

இந்த நம்பிக்கையும் பொறுமையும் தான் பாபாவிடம் காணப்படும் அளவற்ற பொக்கிஷங்கள். யாருக்கு வேண்டுமானாலும் கிடைக்கும். எவ்வளவு வேண்டு மானாலும் கிடைக்கும். வேண்டியவற்றை பக்தர்கள் எடுத்துச் செல்லலாம். அதனால் தான் பாபாவின் பக்தர்கள் படையே வந்தாலும் நடுங்காமல் பொறுமை யோடு பாபாவின் மேல் நம்பிக்கை வைத்து நிதானம் காக்கிறார்கள்.-Source: newstm

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!