இந்த முறை உலகக்கோப்பை யாருக்கு?- கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் கணிப்பு..!


உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும். அதில் இந்தியா வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை கணித்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. எந்த அணி வெற்றி பெற்று கோப்பையை வெல்லும் என்பது குறித்து பிரபலங்கள் கணித்து வருகின்றனர். இந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, இந்தியாதான் கோப்பையை வெல்லும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுந்தர் பிச்சை கூறுகையில் ‘‘உலகக்கோப்பை இறுதிப் போட்டி இந்தியா – இங்கிலாந்துக்கு இடையில்தான் நடக்கும். ஆனால், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளும் சிறப்பாக விளையாடி வருகிறது என்பது உங்களுக்குத் தெரியும். இரண்டும் மிகமிக சிறந்த அணி. இந்தியா கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அதற்கு பல தடைகளை தாண்ட வேண்டும்.


முதன்முறையாக அமெரிக்கா வந்தபோது, பேஸ்பால் ஆட்டத்திற்கு ஏற்ப என்னை மாற்றிக் கொள்ள முயற்சி செய்தேன். அந்த வகையில் கிரிக்கெட்டை விட அது சற்று சவாலானது என்று நான் சொல்வேன். என்னுடைய முதல் ஆட்டத்தால் நான் பெருமை அடைந்தேன். ஏனென்றால், நான் அடித்த பந்து பின் பக்கம் வெகுதூரம் சென்றது. கிரிக்கெட்டில் அது சிறந்த ஷாட். அந்த ஷாட் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சிறந்த ஷாட் என்று நினைத்தேன். ஆனால், மக்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன் ஓடும்போது தன்னுடன் பேட்டையும் கொண்டு செல்வார். ஆகவே, நான் பேட்டுடன்தான் ஓடுவேன். அது சற்று கடினமாக இருப்பதாக உணர்ந்தேன். பல விஷயங்களை மாற்றியுள்ளேன். ஆனால், கிரிக்கெட்டுதான் என்னுடன் ஒட்டுக்கொண்டிருக்கிறது’’ என்றார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!