எல்ஜி வி30+ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்…!


எல்ஜி நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்று வி30+ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

எல்ஜி நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய வி30+ ஸ்மார்ட்போன் 6.0 இன்ச் 1440×2880 பிக்சல் QHD+OLED ஃபுல் விஷன் டிஸ்ப்ளே மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் கொண்டுள்ளது.

16 எம்பி பிரைமரி கேமரா, f/1.6 அப்ரேச்சர், க்ரிஸ்டல் க்ளியர் லென்ஸ், OIS, EIS மற்றும் ஹைப்ரிட் ஆட்டோ ஃபோகஸ், லேசர் மற்றும் ஃபேஸ் டிடெக்ஷன் ஆட்டோஃபோகஸ் அம்சம் + 13 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, 120 கோண வைடு ஆங்கிள் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.


இத்துடன் IP68 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதியும் MIL-STD 810G டிரான்சிட் டிராப் டெஸ்ட் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளதால், மிலிட்டரி பயன்பாடுகளுக்கு உகந்தது ஆகும்.

எல்ஜி வி30+ சிறப்பம்சங்கள்:

– 6.0 இன்ச் 2880×1440 பிக்சல் QHD+ OLED டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டாகோர் குவால்காம் ஸ்னப்டிராகன் 835 பிராசஸர்
– அட்ரினோ 540 GPU
– 4 ஜிபி ரேம்
– 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட், எல்ஜி UX 6.0+
– 16 எம்பி, f/1.6 அப்ரேச்சர், 13 எம்பி பிரைமரி கேமரா
– 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2 அப்ரேச்சர்
– கைரேகை ஸ்கேனர்
– வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3,300 எம்ஏஎச் பேட்டரி, குவால்காம் க்விக் சார்ஜ் 3.0
– வயர்லெஸ் சார்ஜிங்

எல்ஜி வி30+ ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் எல்ஜி வி30+ விலை ரூ.44,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய எல்ஜி வி30+ ஸ்மார்ட்போன் விற்பனை டிசம்பர் 18-ம் தேதி முதல் துவங்குகிறது. – Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!