முஸ்லிம்கள் மீது கொடூர தாக்குதல்- வழிபாட்டுத் தலங்கள் தீக்கிரை- சொத்துகள் சூறை


இலங்கையில் தமிழினப் படுகொலையைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதுடன் சொத்துகளும் சூறையாடப்பட்டு வருவதால் உச்சகட்ட அச்சம் நிலவி வருகிறது. இதையடுத்து இலங்கையின் வடமேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழர்கள் மீது படிப்படியாக இனப்படுகொலையை அரங்கேற்றி 2009 முள்ளிவாய்க்காலில் ஒன்றரை லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஈழத் தமிழர் இனப் படுகொலைக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை.

இதனிடையே ஈஸ்டர் தாக்குதல்களை இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்தினர். இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி தற்போது முஸ்லிம்கள் மீது சிங்களர்கள் குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இலங்கையின் பல பகுதிகளில் திடீரென முஸ்லிம்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.இச்சம்பவங்களில் 2 பேர் பலியாகினர். முஸ்லிம்களின் சொத்துகளும் குறிவைத்து சூறையாடப்பட்டுள்ளன.

இதையடுத்து வன்முறை வெடித்த இடங்களில் ஊரடங்கு உத்தரவு இரவு முழுவதும் அமல்படுத்தப்பட்டன. இன்று காலையும் வடமேல் மாகாணம் உள்ளிட்ட பதற்றம் நீடிக்கும் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!