குண்டுவெடிப்புகளை அரங்கேற்ற ஐ.எஸ். அமைப்பு இலங்கையை தேர்ந்தெடுத்தது ஏன்? சிறிசேனா..!


இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ந்தேதி 3 கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மூன்று 5 நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதல்களில் 253 பேர் உயிரிழந்தனர். 500 பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றது. ஆனால், ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய தேசிய தவ்ஹீத் ஜமாத் (என்.டி.ஜே.) மற்றும் ஜமாதி மிலாது இப்ராகீம் என்ற பிரிவினைவாத குழு மீது அரசு குற்றச்சாட்டு தெரிவித்தது. தொடர்ந்து, அதிபர் மைத்ரிபால சிறிசேனா கடந்த வாரம் இந்த இரு அமைப்புகளையும் தடை செய்து உத்தரவிட்டார்

இந்த நிலையில் பி.பி.சி. செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த இலங்கை அதிபர் சிறிசேனாவிடம், ஐ.எஸ். அமைப்பினர் தாக்குதலை அரங்கேற்ற இலங்கையை தேர்வு செய்ய காரணம் என்ன? என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் பதிலளித்தபோது, ‘நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால், நான் மிகவும் அதிர்ச்சியில் இருக்கிறேன். ஐ.எஸ். அமைப்பு ஏன் இலங்கையை தேர்வு செய்தது? என என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ‘தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் ஐ.எஸ். அமைப்பால் உலகின் சக்தி வாய்ந்த நாடுகளை எதிர்க்க முடியவில்லை.

எனவே தாங்கள் இன்னும் செயல்பாட்டில்தான் இருக்கிறோம் என்பதை உலகுக்கு உணர்த்தவே இலங்கையை அவர்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்’ என்று குறிப்பிட்டார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!