விண்வெளியில் உருளை வடிவில் புதிய விண்கல் – விஞ்ஞானிகள் ஆராய்ச்சி…!


விண்வெளியில் உலாவி வரும் புதிய சிறிய கோளில் உயிரினங்கள் இருப்பதற்கான அறிகுறிகள் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

விண்வெளியில் புதிய விண்கல் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அது சிறிய கோளாக இருக்கும் எனக்கூறப்பட்டது.

விண்கல்லை கண்டறிந்த ஹவாய் பல்கலைக்கழகம் அதற்கு ஓயூமுயா எனப் பெயரிட்டுள்ளனர். இதை பன் – ஸ்டார்ஸ் 1 என்ற தொலைநோக்கியின் மூலம் கண்டறிந்தனர். இது குறித்து விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

சிறிய கோளானது கோள வடிவில் இருக்கும். துணைக் கோள்கள் சூரியனை வட்டப்பாதையில் சுற்றி வரும். ஆனால் இது உருளை வடிவில் உள்ளது. மேலும் குறிப்பிட்ட பாதையில் சுற்றவில்லை.

புதியதாக கண்டறியப்பட்டுள்ள இந்த விண்கல் 1,96,000 மைல்/மணி வேகத்தில் வலம் வருகிறது. இது செயற்கையானது என பலர் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

அது இயற்கையாக உருவானதா அல்லது செயற்கையானதா மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர். மேலும், அதில் உயிரினங்கள் இருந்தற்கான அறிகுறிகள் இருக்கிறதா என்பதையும் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்கின்றனர். – Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!