டொக்கு வச்சா மொக்கா ப்ளேயர்… சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பாடிய ராப் பாடல்..!


சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தமிழில் பாடி பார்த்திருக்கீங்களா? அதுவும் ராப் பாடலை பாடி உள்ளனர். சி.எஸ்.கே வீரர்கள் சில வார்த்தைகள் தமிழில் பேசினாலே ரசிகர்கள் சமூக வலைதளத்தில் டிரெண்டாக்கி விடுகிறார்கள்.

“பந்து எடுத்து சுழற்றவும் தெரியும். தேவைப்பட்டா கம்பு எடுத்து சுத்தவும் தெரியும்” என ஹர்பஜன் ஒ டுவிட் போட்டார். சென்னை ரசிகர்கள் மத்தியில் செம்ம டிரண்டானது.

இந்த நிலையில்தான் சென்னை வீரர்கள் தமிழில் பாடிய ஒரு ஆல்பத்தை சென்னை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

டொக்கு வச்சா மொக்கா ப்ளேயர்… டக்கு பௌலருக்கு மொக்க ஓவர்… என தொடங்கும் இந்த ராப் பாடலை டுப்ளிஸிஸ், வாட்சன், தாஹிர், ரெய்னா, பிராவோ, ஹர்பஜன் உள்ளிட்ட சென்னை வீரர்கள் பாடியுள்ளனர். இந்தப் பாடலுக்கு நல்ல ரெஸ்பான்ஸ். தற்போது இந்தப் பாடல் சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!