நீ என்னை பரிபூரண சரணாகதியடைந்தால் நான் உன்னுடையவனே…!


பஞ்ச பூதங்களான இவ்வுடம்பு அழியக்கூடியது, நிலையற்றது. ஆனால் அதனுள் இருக்கும் ஆன்மாவே பரம்பொருள். அதுவே அழியாததும், நிலையானதுமான பரிபூரண உண்மையாகும். இப்புனித மெய்மை, உணர்வுநிலை அல்லது பிரம்மமே மனத்திற்கும், புலன்களுக்கும் அதிபதியாகவும் ஆட்டுவிப்போராகவும் உள்ள சாயி என்ற பரம்பொருள். சாயிபாபா எப்போதுமே கருணை நிறைந்தவராக இருக்கிறார். அவர்பால் முழுமனதான பக்தியே நம்மைப் பொறுத்தவரை தேவைப்படுவதாகும். உறுதியான நம்பிக்கையும், பக்தியும் ஒரு பக்தன் பெறும்போது அவனது விருப்பங்கள் விரைவில் நிறைவேறுகின்றன.


பாபாவிடம் செல்ல பக்தன் எவ்வளவு அதிகம் கவலையுள்ளவனாக இருக்கிறானோ, எவ்வளவு அதிகம் பக்தியுடனும், நம்பிக்கையுடனும் இருக்கிறானோ, அவ்வளவு விரைவில் அவன் மனநிறைவு அடையும் வண்ணம் அவனது எண்ணம் நிறைவேற்றப்படும். புற உலகை நம்பி என்னை உதாசீனப்படுத்துகிறாய், மறந்துப்போகிறாய். அப்போது என் உதவி எப்படி உனக்குக் கிடைக்கும். நான் இருக்கிறேன் என்ற விஷயத்தை நீ மறந்துவிடாதே. நான் உன்னைக் காப்பாற்றுகிறேன்.


நீ என்னை பரிபூரண சரணாகதியடைந்தால் நான் உன்னுடையவனே, உனக்கு சேவை செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன் இறுதிக்காலம் வரை எனக்காகவே ஏங்குபவர்கள் நிச்சயமாக என்னுள் ஐக்கியமாவார்கள் நிலையற்ற புத்தியுள்ள மனிதன், ஒரு முறை கவலையை இறக்கிவைப்பான். இன்னொரு முறை அதை தன் மீது ஏற்றிக்கொண்டு திரிவான். அவனது மனதுக்கு உறுதி என்றால் என்ன என்பதே தெரியாது. அவனுக்கு உதவி செய்ய நான் இறக்கம் கொண்டுள்ளேன். உங்களுடைய நம்பிக்கையை என் மீது வைத்து அதை பற்றிக்கொள்ளுங்கள். நான் வழிகாட்டுகிறேன்.-Source: dinakaran

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!