சியோமி ஸ்மார்ட்போனின் அதிரடி விலை குறைப்பு… எவ்வளவு தெரியுமா?


சியோமி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.1,000 குறைப்பதாக அறிவித்துள்ளது. சியோமி நிறுவனத்தின் முதல் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் Mi A1 டூயல் பிரைமரி கேமராவுடன் செப்டம்பர் மாத வாக்கில் இந்தியாவில் வெளியிடப்பட்டது.

இந்தியாவில் ரூ.14,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட Mi A1 கடந்த வாரம் பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற்ற சிறப்பு விற்பனையில் ரூ.2,000 தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்பட்டது.

இதே விலையில் சியோமியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும் விற்பனை செய்யப்பட்டது. அந்த வகையில் Mi A1 ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.1,000 நிரந்தரமாக குறைக்கப்படுவதாக சியோமி அறிவித்துள்ளது.

அந்த வகையில் வாடிக்கையாளர்கள் சியோமி Mi A1 ஸ்மார்ட்போனினை ரூ.13,999 விலையில் வாங்க முடியும். ஸ்டாக் ஆண்ட்ராய்டு மற்றும் டூயல் 12 எம்பி பிரைமரி கேமரா கொண்டிருக்கும் Mi A1 ஸ்னாப்டிராகன் 625 சிப்செட் கொண்டிருக்கிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

சியோமி Mi A1 சிறப்பம்சங்கள்:

– 5.5 இன்ச் ஃபுல் எச்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ்
– குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 ஆக்டாகோர் பிராசஸர்
– 4 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– 12 எம்பி + 12 எம்பி பிரைமரி கேமரா
– 5 எம்பி செல்ஃபி கேமரா
– Mi Ui சார்ந்த ஸ்டாக் ஆண்ட்ராய்டு 7.1.1
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3080 எம்ஏஎச் பேட்டரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– கைரேகை ஸ்கேனர்

புதிய Mi A1 ஸ்மார்ட்போனில் ஆயிரக்கணக்கான தொலைகாட்சிகளுடன் இணைக்கும் வசதி, செட் டாப் பாக்ஸ், குளிர்சாதன பெட்டி, ஸ்பீக்கர்கள் மற்றும் பல்வேறு சாதனங்களின் சப்போர்ட் வழங்கப்படுகிறது.

மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு கொண்டிருக்கும் Mi A1 ஸ்மார்ட்போன் வளைந்த எட்ஜ் மற்றும் 7.3 மில்லிமீட்டர் தடிமனாக இருக்கிறது. – Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!