அப்படி என்னதான் வசியம் செய்கிறாரோ… பாபா என்னும் இரண்டெழுத்து மந்திரம்….!


பாபா… சக்திமிக்க இந்த இரண்டெழுத்தை சொல்லும் போதே மனம் முழுக்க அமைதி பரவும். அப்படி என்னதான் வசியம் செய்கிறாரோ பக்கிரி என்று கூட பக்தர்கள் போலி கோபம் கொள்வதுண்டு. இல்லையென்று சொல்லாமல் வேண்டியதை வேண்டுவதற்கு முன்பே தருவதால் பாபா அறியாமல் வாழ்வில் எவ்வித சூதுமில்லை என்று உருகுகிறார்கள் பக்கிரி பக்தர்கள்.

நினைத்தது நடக்க வேண்டும் என்று நினைக்கும் போதே நினைப்பதை நல்லதாகச் செய்யும் அற்புதங்களையும் நிகழ்த்திடுவார் சாயி.. பாபாவுக்காக நம்பிக்கையுடன் படைக்கப்படும் நைவேத்யங்கள் கூட ஏதாவது ஒரு வகை யில் அவரை சேர்ந்துவிடும். இதை உணர்த்தும் வகையில் ஷீரடியில் ஒரு சம்ப வம் நடந்தது.

பாபாவைச் சந்திக்க பக்தர் ஒருவர் ஷீரடிக்கு வந்திருந்தார். பக்தர்களின் வரிசையில் நின்று பாபாவைத் தரிசித்தார். பாபாவைக் கண்டதும் மனதில் இருந்த சங்கடங்கள் அனைத்தும் விலகியது. என்ன வேண்டி இங்கு வந்தோம் என்பதையே மறக்கசெய்துவிட்டது பாபாவின் தரிசனம்…. பாபாவின் அன்பை பெற தன்னிடமிருக்கும் அனைத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று விரும்பினார் இந்த பக்தர்..


பாபாவின் அருகில் சென்றதும், கைகளில் இருந்த பழங்களை அன்பு பொங்க பாபாவிடம் கொடுத்தார். ‘தட்சிணை ஏதும் இல்லையா?’ என்றார் பாபா புன்னகையோடு… ‘இதை எப்படி மறந்தேன் ஐயா.. ‘என்றபடி கையிலிருந்த நூறு ரூபாய்த் தாளை எடுத்து கொடுத்து பாபாவின் ஆசிர்வாதம் பெற்று வீட்டுக்குத் திரும்பிய போது தான் பக்தருக்கு நினைவு வந்தது. அடடா.. இன்னும் ஒரு ரூபாய் வைத்து கொடுத்திருந்தால் தட்சணை விசேஷமாக இருந்திருக்குமே என்று நினைத்து கலங்கினார்.

சில நாட்கள் கழித்து, பக்கிரி பக்தர் பாண்டுரங்கனின் ஆலயத்துக்குச் சென் றார். ஆலய தரிசனம் முடிந்து சிறிது நேரம் அங்கேயே அமர்ந்திருந்தார். அப்போ தும் பாபாவுக்கு ஒரு ரூபாய் கொடுக்காமல் விட்டோமே என்று யோசித்தார். பக்கத்தில் ஞானி ஒருவர் வந்து அமர்ந்தார். ‘ஏன் சஞ்சலத்தோடு இருக்கிறாய். அந்த ஒரு ரூபாயை எனக்குக் கொடு’ என்றார்… எதுவும் பேசாத பக்கிரி பக்தன் தன் பையிலிருந்து பத்து ரூபாயை எடுத்து கொடுத்தார். மறுத்த ஞானி ‘எனக்குத் தேவை நீ கொடுக்காமல் விட்ட ஒரு ரூபாய் தான்… அதை மட்டும் கொடு’ என்று வாங்கிச் சென்றார்.

பாபாவுக்கு கொடுக்காமல் விட்ட ஒரு ரூபாயைத் தான் ஞானி வாங்கி யிருக்கிறார் என்று உணர்ந்து கொண்ட பக்கிரி பாபாவின் பக்தருக்கு, கண்களில் நீர் மல்கிற்று…கண்களை மூடினால் பாபாவின் திருவுருவம் புன்னகைத்தது போல் இருந்தது….

நம்பிக்கையோடு பாபாவை பற்றிக்கொள்ளுங்கள். எண்ணிய எண்ணங்களும் நல்லனவாக இருக்கும். எண்ணிய யாவும் இனிதே நடைபெறும்.-Source: newstm

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!