பணத்தை ஊதாரித்தனமா செலவழிப்பதில் இந்த ராசிக்காரர்களை அடிச்சுக்க ஆளே இல்லையாம்..!


பணத்தை சேமிப்பது மிகவும் முக்கியம் தான். ஆனால் சில பேர்கள் தங்கள் சந்தோஷத்திற்காக எவ்வளவு வேண்டுமானாலும் பணத்தை செலவழிப்பார்களாம். இப்படி பணத்தை செலவழிப்பதற்கும் ராசி தான் காரணம் என்கிறது ஜோதிடம். ஆமாங்க இந்த ராசிக்காரர்களுக்கு ஷாப்பிங் என்றால் போதும் உடனே கிளம்பிடுவாங்களாம்.

பணத்தை செலவழிப்பது தான் இவர்களுக்கு சந்தோஷம் என்று நம்புவார்கள். இந்த ராசிக்காரர்களிடம் அருணாசலம் படம் மாதிரி எவ்வளவு பணத்தை கொடுத்தாலும் செலவழிக்கும் பந்தயத்திற்கு தயாராக இருப்பார்களாம். அப்படிப்பட்ட 6 ராசிக்காரர்களைப் பற்றி தான் நாம் இங்கே காண போகிறோம்.


மேஷம்

இந்த ராசிக்காரர்கள் உற்சாகமாக இருக்கிறதுக்கு என்றே பிறந்தவர்கள். பணத்தை சரியான வழியில் செலவழிப்பதில் முதுகலை பட்டம் பெற்றவர்கள். அப்படிப்பட்ட அவர்களுக்கு புதுசு புதுசா ஆடைகளை பார்த்து விட்டால் போதும் கொஞ்சம் கூட தாமதிக்க மாட்டார்கள். வாங்கிட்டு தான் மறுவேலை பார்ப்பார்கள். நிறைய வரவு செலவு திட்டங்கள் இருந்தாலும் ஷாப்பிங் செய்வதில் இவர்கள் சிறு குழந்தைகள் தான். எப்படியாவது அடம் பிடித்தாவது வாங்கி விடுவார்கள்.


சிம்மம்

இவர்களுக்கு கையில் பணம் இல்லாமல் இருக்கவே முடியாது. இவர்களை சந்தோஷப்படுத்த கையில் பணத்தை கொடுத்தாலே போதும் குஷியாகி விடுவார்கள். இவர்களுக்கும் ஷாப்பிங் தான் பிடிச்ச ஒன்று. அதிலும் குறிப்பாக ஆடைகளை வாங்கத்தான் அதிகமாக விருப்பப்படுவார்கள். அதிலும் பிராண்ட் போட்ட சட்டை அணியாமல் வெளியே வர மாட்டார்கள் என்றால் பார்த்துக்கோங்களே.


தனுசு

இந்த ராசிக்காரர்களும் தங்கள் பட்ஜெட்டை பற்றி கவலைப்பட மாட்டார்கள். இவர்கள் விலையுயர்ந்த ஆடைகள், புத்தகம், விலையுயர்ந்த ஹோட்டல்கள், விமானப் பயணம் போன்றவற்றிற்காக செலவழிப்பார்களாம். இவர்களுக்கு சாகசங்கள் என்றால் ரெம்ப பிடிக்குமாம். அதற்காக நிறைய செலவும் செய்வார்கள். இவர்களுக்கு பணம் என்பது ஒரு பொருட்டு அல்ல. வாங்கி சந்தோஷம் அடையவே விரும்புவார்கள்.


மிதுனம்

இவர்களுக்கு ஆடம்பரம், வேடிக்கை என்றால் ரெம்ப பிடிக்குமாம். அதற்காகவே தனியாக பணத்தை ஒதுக்கி விடுவார்களாம். இவர்கள் சில விஷயத்திற்காக மட்டுமே பணத்தை சேமித்து வைப்பார்கள். இல்லையென்றால் சம்பாதிக்க செலவழிக்க என்றே இருப்பார்கள்.


கும்பம்

கும்பம் ராசிக்காரர்கள் வேகமாக பணத்தை செலவழிக்கக் கூடியவர்கள். அதிலும் முதலீடுகளில் அதிகமாக பணத்தை செலவிடுவார்கள். புதிய தொழில்நுட்ப முதலீடுகள் என்றால் இவர்களுக்கு ரெம்ப பிடிக்குமாம். இந்த மாதிரியான எண்ணம் தோன்றினாலே போதும் பணத்தை எடுத்து செலவழிக்க ஆரம்பித்து விடுவார்கள்.


மீனம்

மீன ராசிக்காரர்களும் பணத்தை தண்ணியாக செலவழிக்க கூடியவர்கள். இவர்களிடம் உதவி என்று வந்தவர்களுக்கு ஒருக்காலும் இல்லை என்று சொல்லமாட்டார்களாம். நண்பர்கள், உறவினர்கள் ஏன் அந்நியர்களுக்கு கூட தாராளமாக பணத்தை வாரிக் கொடுக்கும் வள்ளலாக இருப்பார்கள். தங்கள் கையில் பணம் இல்லையென்றாலும் முழுவதையும் நண்பர்களுக்கு கொடுத்து மகிழ்வார்களாம்.-Source: boldsky

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!