வாட்ஸ்அப்பில் இதைச் செய்யாதீர்கள் மீறினால் தடை விதிக்கப்படும் – பயனாளர்களுக்கு எச்சரிக்கை..!


ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் இருக்கும் அதிகாரபூர்வ செயலியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என வாட்ஸ்அப் நிறுவனம் பல காலமாகவே தெரிவித்து வருகிறது. ஆனால், சிலர் போலியான செயலிகளை டவுன்லோட் செய்து பயன்படுத்தி வருகிறார்கள்.

இதுபோன்ற போலியான பல செயலிகள் அதிகமாகப் பயன்பாட்டிலிருந்து வருகின்றன. மாற்றம் செய்யப்பட்ட இந்த செயலிகளைப் பயன்படுத்துவதால் கூடுதலாக சில வசதிகளைப் பெற முடிகிறது என்பதுதான் இது போன்ற போலி செயலிகளை சிலர் பயன்படுத்தக் காரணம். அவர்களை இது வரை சாதாரணமாக எச்சரித்து வந்த வாட்ஸ்அப் இப்போது கடுமையாக நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி போலியான செயலிகளைப் பயன்படுத்தி வருபவர்களைத் தற்காலிகமாகத் தடை செய்ய முடிவு செய்திருக்கிறது.

அப்படி தடை செய்யப்பட்டவர்களுக்கு அவர்களது மொபைல் எண் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டதற்கான செய்தி போலி செயலியில் காட்டப்படுகிறது. `மேலும் உதவி தேவை என்றால் எங்களைத் தொடர்புகொள்ளவும்’ என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலமாக அவர்கள் தொடர்ந்து வாட்ஸ்அப்பை போலி செயலியில் தொடர்ந்து பயன்படுத்த முடியாது. அதேநேரம் அதிகாரபூர்வ வாட்ஸ்அப் செயலியை இன்ஸ்டால் செய்து அதே மொபைல் எண்ணில் மீண்டும் பயன்படுத்தத் தொடங்கலாம். போலியான செயலிகளைப் பயன்படுத்துவதன் மூலமாகத் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன என்பதால் வாட்ஸ்அப் இந்த முடிவை எடுத்திருக்கிறது.-Source: vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!