ஆப்பிள் நிறுவனத்தை வாயை பிளக்க வைத்த சியோமி ஸ்மார்ட்போன்!


சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி மலிவு விலை மற்றும் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்வதில் பிரபல நிறுவனமாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான தகவல்களின் படி சிறப்பான கேமரா வழங்கும் ஸ்மார்ட்போன்களை வழங்குவதில் சியோமி பெயர்பெற்றிருக்கிறது.

டிஎக்சோமார்க் (DxOMark) எனும் பென்ச்மார்க்கிங் தளத்தில் தலைசிறந்த கேமரா வழங்கும் ஸ்மார்ட்போன்கள் அவை வழங்கும் புகைப்பட தரம் கொண்டு மதிப்பீடு செய்து வருகிறது. சமீபத்தில் வெளியாகியுள்ள புள்ளிகளின் அடிப்படையில் ஐபோன் 8, கூகுள் பிக்சல் மற்றும் எச்டிசி யு11 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களை விட சியோமியின் Mi நோட் 3 கேமரா அதிக புள்ளிகளை பெற்றுள்ளது.


அதன்படி டிஎக்சோமார்க் தளத்தில் சியோமி Mi நோட் 3 ஸ்மார்ட்போனின் கேமரா புகைப்படங்களை வழங்குவதில் 94 புள்ளிகளையும், வீடியோக்களில் 82 புள்ளிகளையும் பெற்றிருக்கிறது. ஒட்டுமொத்தமாக Mi நோட் 3 ஸ்மார்ட்போன் கேமரா 90 புள்ளிகளை பெற்றிருக்கிறது.

தரமுள்ள புகைப்படங்களை வழங்குவதில் பெயர்பெற்ற ஸ்மார்ட்போன்களான ஆப்பிள் ஐபோன் 8, கூகுள் பிக்சல் மற்றும் எச்டிசி யு11 போன்ற ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும் போது இவை முறையே 93, 90 மற்றும் 90 புள்ளிகளையே பெற்றுள்ளன. இந்த தகவல்களை வைத்து பார்க்கும் போது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் விலையில் பாதி விலையில் கிடைக்கும் சியோமி பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்கள் தரமுள்ளதாக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.


டிஎக்சோமார்க் வெளியிட்டுள்ள தகவல்களின் படி Mi நோட் 3 ஸ்மார்ட்போனில் வேகம் மற்றும் அதிக துல்லியமான ஆட்டோஃபோகஸ், கச்சிதமான இமேஜ் ஸ்டேபிலைசேஷன் மற்றும் கவர்ச்சிகர சூம் வசதியை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் அழகிய போக்கெ புகைப்படங்கள், குறைவான வெளிச்சசத்திலும் தரமுள்ள புகைப்படங்களை வழங்குகிறது. எனினும் குறைந்த வெளிச்சத்தில் பொக்கே மோட் சரியாக வேலை செய்யவில்லை.

கூகுள் பிக்சல் 2, ஆப்பிள் ஐபோன் X, ஹூவாய் மேட் 10 ப்ரோ மற்றும் கேலக்ஸி நோட் 8 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டின் சிறந்த கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது..-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!