ஃபேஸ்புக் மெசன்ஜர் புதிய கேம் மற்றும் அம்சங்கள்…!


ஃபேஸ்புக் மெசன்ஜர் கேம்களின் முதல் ஆண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு புதிய கேம் மற்றும் அம்சங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

ஃபேஸ்புக் மெசன்ஜர் செயலியில் கேம்கள் வழங்கப்பட்ட முதல் ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், பல்வேறு புதிய கேம்கள் மற்றும் அம்சங்களை ஃபேஸ்புக் வழங்கி வருகிறது.

தற்சமயம் ஃபேஸ்புக் மெசன்ஜரில் 70க்கும் அதிகமான கேம்களும், உலகம் முழுக்க 100க்கும் அதிகமான டெவலப்பர்களும் உள்ளனர்.


புதிய அப்டேட் மூலம் ஃபேஸ்புக் மெசன்ஜர் கேம்களை நண்பர்களுக்கு லைவ் ஸ்டிரீம் செய்யும் வசதி, நண்பர்களுடன் உரையாடுவது போன்றவை வழங்கப்படுகிறது.

லைவ் ஸ்டிரீமிங் துவங்க, கேம் திரையின் மேல் வலது புறத்தில் உள்ள புதிய கேமரா ஐகானை கிளிக் செய்தால் போதும். லைவ் ஸ்டிரீமிங் அம்சம் மூலம் வீடியோ எவ்வித பயனர்களுக்கு சேர வேண்டும் என்பதை தேர்வு செய்வதோடு, வீடியோ குறித்த சிறிய விளக்கத்தையும் பதிவிட முடியும்.

நேரலை நிறைவுற்றதும், உங்களது ஃபேஸ்புக் பேஜ் அல்லது நண்பர்களின் ப்ரோஃபைலில் பதிவிடும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. புதிய லைவ் ஸ்டிரீமிங் வசதி வாடிக்கையாளர்களுக்கு படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.


இத்துடன் மெசன்ஜரில் நண்பர்களுடன் வீடியோ கால் செய்யும் போதே கேம்களை விளையாடும் வசதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் இந்த அம்சம் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் வழங்கப்படும் என்றும் இந்த வசதியை பெறும் முதல் கேம் சிங்கா (Zynga) என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து மெசன்ஜஜர் செயலிக்கென புதிய ஆங்ரி பேர்ட்ஸ் (Angry Birds) கேம் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் வழங்கப்பட இருப்பதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

ஆங்ரி பேர்டு மட்டுமின்றி மெசன்ஜர் க்ரூப்களில் விளையாடும் வசதி கொண்ட டெட்ரிஸ் மெசன்ஜர் போன்ற கேம் விரைவில் வழங்கப்டும் என கூறப்படுகிறது.

இரண்டு கேம்களும் கூல்கேம்ஸ் நிறுவனம் மூலம் உருவாக்கப்பட இருக்கிறது. தற்சமயம் அறிவிக்கப்பட்ட கேம் தவிர வரும் வாரங்கள் அல்லது மாதங்களில் மேலும் சில புதிய கேம்கள் வழங்கப்பட இருக்கிறது. – Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!