அன்னதானம் கொடுத்து ஸ்ரீசாயியை உங்கள் இல்லத்துக்கு வரவழையுங்கள்..!


பகவான் ஸ்ரீசாயி ஒவ்வொரு பக்தரையும் பார்த்துக்கொண்டே இருக்கிறார். தன்னை முழுமையாக சரண் அடைந்தவரை ஒருபோதும் அவர் கைவிடுவதில்லை. அதே நேரம் அவருக்கு விருப்பமான காரியங்கள் செய்பவர் மீது அளப்பரிய அன்பு செலுத்துவார். ஆம், அன்னதானம் செய்பவரை ஸ்ரீசாயி தன்னுடைய அன்புக்கு பாத்திரமாகக் கருதுகிறார்.

ஏனென்றால் அன்னதான ம் அத்தனை மகிமை நிரம்பியது. உயிர் வாழ்வதற்கு அத்தியாவசிய தேவையான உணவை, மற்றவர்க்கு தானமாக அளிப்பதே அன்னதானம். இது அளவற்ற புண்ணியம் தரும்.

மற்ற எந்த பொருளை தானமாகக் கொடுத்தாலும், பெறுபவர், இன்னும் கொஞ்சம் அதிகம் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணச் செய்யும். ஆனால், அன்னதானம் மட்டுமே போதும் என்ற சொல்லை தானமாகப் பெறுபவரிடமிருந்து கொண்டு வரும். அதனாலே அன்னதானத்தை பூரண தானமாக சொல்கிறார் பாபா.

வயிறு நிறைந்து, உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் ஈரேழு ஜன்மங்களையும் தொடர்ந்து வரும். அன்னதானம் மட்டுமே செய்தவரை மட்டும் சென்றடையாமல், செய்தவரின் சந்ததியினரையும் காக்கக் கூடியது என்று சொல்கிறார் பாபா.

உங்களிடம் குறைவாக உணவு இருந்தாலும் பரவாயில்லை. பகிர்ந்து கொடுங்கள். அன்னதானம் கொடுத்து ஸ்ரீசாயியை உங்கள் இல்லத்துக்கு வரவழையுங்கள்.

ஸ்ரீசாயியே சரணம்.-Source: timestamilnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!