இதையெல்லாம் செய்தால் உங்கள் வாட்ஸாப் அக்கவுண்ட் ரத்து செய்யப்படுமாம்… உஷார்..!


வாட்ஸாப் செயலியானது தனிநபர்களுக்குள் தகவல்களை பரிமாறிக் கொள்ள வேண்டும் என்றே உருவாக்கப்பட்டுள்ளது. இதனை விளம்பரங்கள், பிரச்சாரங்கள் போன்றவைகளுக்காக பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் ஒரு மாதத்திற்கு 1.5 பில்லியன் ஆக்டிவ் பயனாளர்கள் வாட்ஸாப்பினை பயன்படுத்தி வருகின்றனர். இதில் ஒரு மாதத்திற்கு 2 மில்லியன் வாடிக்கையாளர்களின் அக்கவுண்டுகளை வாட்ஸாப் நிறுவனமே ரத்து செய்து வருகிறதாம்.

இதற்கு காரணம் சில வாட்ஸாப் பயனாளர்களின் தவறான செயல்கள் தான். குறிப்பாக, ஒரு நாட்டின் இருந்துகொண்டு வேறு ஒரு நாட்டின் மொபைல் எண்ணை பயன்படுத்துவது, குறிப்பிட்ட ஒரு வாட்ஸாப் அக்கவுண்டினை விளம்பரம், பிரச்சாரம் சம்பந்தமாக பல்க் மெசேஜ்களை அனுப்ப மட்டும் பயன்படுத்துவது.

வாடஸாப் நிறுவனம் ஏற்கனவே ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் மெசேஜ் பார்வர்டு செய்வதை தடை செய்துள்ளது. ஆனால் இதையும் மீறி ஒருசிலர் சில செயலிகளை பயன்படுத்தி பல்க் மெசேஜ்களை அனுப்பி வருவதாக வாட்ஸாப் நிறுவனம் கண்டறிந்துள்ளது.

இந்நிலையில் இதைப்போன்ற செயல்பாடுகளை கண்காணித்து அப்படிப்பட்ட அக்கவுண்டுகளை ரத்து செய்யும் செயலில் வாட்ஸாப் நிறுவனம் இறங்கியுள்ளது. இப்படி ரத்து செய்யும் எண்களைக் கொண்டு மீண்டும் வாட்ஸாப் அக்கவுண்டினை பயன்படுத்த முடியாது. ஆனால் வேறு எண்ணை பயன்படுத்த முடியும்.

வாட்ஸாப் செயலியானது தனிநபர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களுடன் பாதுகாப்புடன் உரையாட மட்டுமே உருவாக்கப்பட்டது. இதனை தொழில், அரசியல் ரீதியாகவும், வதந்திகளை பரபப்புவதற்கும் யாரும் பயன்படுத்திவிட கூடாது என்று வாட்ஸாப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு வாட்ஸாப்பினை தவறாக பயன்படுத்துவோரை கண்கானிக்க பிரத்யேகமான தொழில்நுட்பத்தினை பயன்படுத்தவும் வாட்ஸாப் நிறுவனம் முடிவு செய்துள்ளது. எனவே நீங்களும் உஷாராக இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.-Source: spark

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!