10 ஆண்டு காதலியுடன் திருமண நிச்சயம் செய்தார் ரபேல் நடால்..!


ஸ்பெயினைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடால் தன் காதலி மேரி பெரேலோவுக்கு மோதிரம் அணிவித்து திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்ட தகவலை தற்போது தெரிவித்துள்ளார்.

ஸ்பெயினைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் 32 வயதான ரபேல் நடால், மேரி பெரேலோ என்ற பெண்ணை கடந்த 10 ஆண்டுக்கு மேலாக காதலித்து வருகிறார். முக்கியமான போட்டிகளின்போது மைதானத்திற்கு சென்று நடாலை உற்சாகப்படுத்தும் பெரேலோ, நடாலின் டென்னிஸ் அகாடமியையும் கவனித்து வருகிறார்.

இந்த நிலையில் 8 மாதத்திற்கு முன்பே மேரி பெரேலோவுக்கு மோதிரம் அணிவித்து திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டு விட்டதாகவும், அந்த தகவலை இதுவரை ரகசியமாக வைத்திருந்ததாகவும் நடால் தற்போது கூறியுள்ளார். ஆண்டின் இறுதியில் இருவரும் திருமணம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!