முதல் முறையாக தமிழகத்தில் 26 லட்சம் இளம் வாக்காளர்கள் ஓட்டு போடுகிறார்கள்..!


தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் தற்போது 5 கோடியே 91 லட்சத்து 23 ஆயிரத்து 197 வாக்காளர்கள் உள்ளனர்.

இதில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 92 லட்சத்து 56 ஆயிரத்து 960 பேரும், பெண் வாக்காளர்கள் 2 கோடியே 98 லட்சத்து 60 ஆயிரத்து 705 பேரும், இதர வாக்காளர்கள் 5472 பேரும் உள்ளனர்.

கடந்த 2018-ம் ஆண்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடும்போது தற்போது 8 லட்சத்து 33 ஆயிரத்து 818 வாக்காளர்கள் சேர்ந்துள்ளனர். பட்டியலில் பெயர் சேர்க்க 14 லட்சத்து 29 ஆயிரத்து 471 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதில் 13 லட்சத்து 96 ஆயிரத்து 326 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்ட பெயர்கள் சேர்க்கப்பட்டன. இறப்பு இரட்டை பதிவு, இடம் மாறுதல் ஆகியவை காரணமாக 5 லட்சத்து 62 ஆயிரத்து 937 பெயர்கள் நீக்கப்பட்டன.

தமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக சோழிங்க நல்லூர் உள்ளது. அங்கு 6 லட்சத்து 18 ஆயிரத்து 695 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதி துறைமுகம். அங்கு 1 லட்சத்து 66 ஆயிரத்து 515 வாக்காளர்கள் உள்ளனர்.

கடந்த 2018-ம் ஆண்டு தமிழகத்தில் 5.86 கோடி வாக்காளர்கள் இருந்தனர். இதில் இறந்தவர்கள் மற்றும் இரட்டைப்பதிவு ஆகியவை நீக்கம் செய்யப்பட்டதில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 4.38 லட்சம் வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.

கடந்த தேர்தலைவிட தற்போது நடைபெற உள்ள தேர்தலில் தமிழ்நாட்டில் 26 லட்சம் வாக்காளர்கள் முதல்முறையாக ஓட்டு போடுகிறார்கள்.

சென்னையில் இந்த ஆண்டு முதல்முறையாக வாக்கு அளிக்கும் இளைஞர்கள் 43 ஆயிரத்து 829 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டு 35 ஆயிரத்து 194 முதல்முறை வாக்காளர்கள் இளைஞர்கள் இந்த ஆண்டு 8635 வாக்காளர்கள் அதிகரித்து உள்ளனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!