சிறையிலேயே உயிரை மாய்த்துக் கொள்வோம்! – முருகன் எழுதிய உருக்கமான கடிதம்..!


`விடுதலை செய்யாவிட்டால் சிறையிலேயே உண்ணாவிரதம் இருந்து மரணிப்போம்’’ என்று எழுதி, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவிக்கும் முருகன், ஆளுநருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் நளினி, அவரின் கணவர் முருகன், பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை தொடர்பாக, தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்குப் பரிந்துரைக் கடிதம் அனுப்பி வைத்தது. அந்தக் கடிதம் தொடர்பாக ஆளுநர் இதுவரை எந்த முடிவையும் எடுக்காமல் அமைதியாக இருக்கிறார்.

இதனால் சிறையில் உள்ளவர்கள் மன உளைச்சலில் உள்ளனர். இந்த நிலையில், வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், கடந்த 19 -ம் தேதி திடீரென உண்ணாவிரதம் இருந்தார். இரண்டாவது நாளாக 20 -ம் தேதியும் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, 20-ம் தேதி மாலை உண்ணாவிரதத்தைத் தற்காலிகமாகக் கைவிட்டார்.

இதையறிந்த முருகனின் வழக்கறிஞர் புகழேந்தி 21-ம் தேதி வேலூர் சிறைக்கு வந்தார். நளினி – முருகனைத் தனித்தனியாகச் சந்தித்த பிறகு வழக்கறிஞர் புகழேந்தி, நிருபர்களிடம் பேட்டி கொடுத்தார்.

`விடுதலை செய்யாவிட்டால் சிறையிலேயே உண்ணாவிரதம் இருந்து மரணிப்போம்’’ என்று எழுதி, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவிக்கும் முருகன், ஆளுநருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் நளினி, அவரின் கணவர் முருகன், பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை தொடர்பாக, தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்குப் பரிந்துரைக் கடிதம் அனுப்பி வைத்தது. அந்தக் கடிதம் தொடர்பாக ஆளுநர் இதுவரை எந்த முடிவையும் எடுக்காமல் அமைதியாக இருக்கிறார். இதனால் சிறையில் உள்ளவர்கள் மன உளைச்சலில் உள்ளனர்.

இந்த நிலையில், வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், கடந்த 19 -ம் தேதி திடீரென உண்ணாவிரதம் இருந்தார். இரண்டாவது நாளாக 20 -ம் தேதியும் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, 20-ம் தேதி மாலை உண்ணாவிரதத்தைத் தற்காலிகமாகக் கைவிட்டார். இதையறிந்த முருகனின் வழக்கறிஞர் புகழேந்தி 21-ம் தேதி வேலூர் சிறைக்கு வந்தார். நளினி – முருகனைத் தனித்தனியாகச் சந்தித்த பிறகு வழக்கறிஞர் புகழேந்தி, நிருபர்களிடம் பேட்டி கொடுத்தார்.

தொடர்ச்சியாக 27 ஆண்டுகள் சிறையில் இருப்பதாலும், தமிழக அரசு விடுதலை செய்ய முடிவெடுத்தும், விடுதலை செய்யப்படாததாலும் மன உளைச்சலில் முருகன் உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கிறார். ஆளுநர் நல்ல முடிவெடுப்பார் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறார்.

முருகன் எழுதிய கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பிவிட்டதாகச் சிறைக் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். விரைவில் ஆளுநர், விடுதலை சம்பந்தமாக நடவடிக்கை எடுக்காவிட்டால் முருகன் மீண்டும் உண்ணாவிரதம் இருப்பார்’’ என்றார் வழக்கறிஞர்.-Source: vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!