ஒரே நாளில் 25 முறை மாரடைப்பு… 17 அறுவை சிகிச்சைகள் – மரணத்துடன் போராடி வென்ற குழந்தை.!


தியோ ஃபிரை என்ற இந்தக் குழந்தை 2017-ம் ஆண்டு மே மாதம் இங்கிலாந்தில் உள்ள லிவர் புல்லில் பிறந்தது. தான் பிறந்த அடுத்த 18-வது நாளில் தன் மரணத்துடன் போராடத்தொடங்கிவிட்டான் இந்த வீரன்.

தியோ பிறக்கும்போதே இதயத்தில் இரு துளைகளுடன் பிறந்ததால் இதயம் சரிவர இயங்காமலும் மற்ற உடல் உறுப்புகளுக்கு ரத்தம் அனுப்ப முடியாத சூழலும் இருந்துள்ளது.


இந்தக் குழந்தை பிறந்து தன் அடுத்த பிறந்தநாளை பார்ப்பதற்குள் இவனுக்கு 17 இதய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. அதிலும் ஒரே நாளில் 25 முறை இவனுக்கு மாரடைப்புகளும் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரே நாளில் இத்தனை மாரடைப்புகளைப் பெரியவர்கள் கூடத் தாங்கிக்கொள்ள மாட்டார்கள். இங்கிலாந்தில் உள்ள எந்த மருத்துவரும் இது போன்ற ஒரு நிகழ்வைச் சந்தித்தது இல்லை எனக் குழந்தை அனுமதிக்கப்பட்டிருந்த சல்ஃபோர்டு ராயல் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தியோவுக்கு இதுவரை 30 மாரடைப்புகள் வந்துள்ளதாகவும் அவன் பிழைக்கவே மாட்டான் என்றுதான் நாங்கள் நினைத்தோம் எனக் கூறியுள்ளனர்.-Source: vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!