ஹூவாய் ஹானர் பிரான்டு புதிய ஹானர் 7X ஸ்மார்ட்போன் டிசம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஹூவாய் நிறுவனத்தன் ஹானர் பிரான்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹானர் 7X ஸ்மார்ட்போனினை இந்தியாவில் வெளியிட இருக்கிறது. முன்னதாக வெளியான ஹானர் 6X ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக இருக்கும் ஹானர் 7X ஸ்மார்ட்போன் கடந்த மாதம் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய ஹானர் 7X ஸ்மார்ட்போனில் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, மினிமல் பெசல், ஆக்டாகோர் கிரின் 659 பிராசஸர், 16 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. சீனாவில் ஹானர் 7X ஸ்மார்ட்போனின் விலை 1299 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.12,885 என்ற விலையில் வெளியிடப்பட்டது.
ஹானர் 7X சிறப்பம்சங்கள்:
– 5.93 இன்ச் 2160×1080 பிக்சல் ஃபுல் எச்டி+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் கிரின் 659 பிராசஸர்
– 4 ஜிபி ரேம்
– 32 ஜிபி / 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 7.0 (நௌக்கட்) மற்றும் EMUI 5.1
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 16 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
– 8 எம்பி செல்ஃபி கேமரா
– கைரேகை ஸ்கேனர்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3340 எம்ஏஎச் / 3240 எம்ஏஎச் பேட்டரி
இந்தியாவில் ஹானர் 7X ஸ்மார்ட்போன் மற்ற நிறுவன ஸ்மார்ட்போன்களை விட குறைவான விலையில் வெளியிடப்படும் என்றும் டிசம்பர் மாத வாக்கில் வெளியிடப்படும் என ஹானர் பிரான்டு சர்வதேச தலைவர் ஜார்ஜ் சௌ தெரிவித்தார். மற்ற நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியளிக்கும் வகையில் இதன் விலை இருக்கும் என்றும் அவர் தெரிவி்த்தார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!