இடி, மின்னல் தாக்குதல் பற்றி முன்கூட்டியே எச்சரிக்கை – புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு.!


இடி, மின்னல் தாக்குதல் குறித்து மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் வகையில் புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் இயற்கை பேரிடரால் ஏற்படும் அழிவு குறித்தும், அதை எதிர்கொள்வது குறித்தும் சர்வதேச மாநாடு 3 நாள்கள் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. அதில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பொது இயக்குநர் கே.ஜே. ரமேஷ் கலந்து கொண்டு பேசியதாவது:-

“ இடி, மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் உயிரிழப்புகள், நாட்டில் இயற்கை பேரிடரால் ஏற்படும் உயிரிழப்புகளில் 2-வது இடம் வகிக்கிறது. இடி, மின்னலை முன்கூட்டியே கணிப்பது விரைவில் சாத்தியமாகும். ரேடார் மற்றும் செயற்கைகோள்கள் அனுப்பும் புகைப்படங்களைக் கொண்டு, இடி, மின்னல் போன்றவற்றை முன்கூட்டியே கண்டுபிடிப்பதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது.

அதன்மூலம் மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொலைபேசி மூலமாகவே, குறுஞ்செய்தி மூலமாகவோ தகவல்கள் தெரிவிக்கப்படும். அதற்கான தொழில்நுட்பத்தை மத்திய அரசு தற்போது உருவாக்கி வருகிறது” என்றார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!