பிள்ளை, புருஷன் வேண்டாம்னு உன் அம்மா சொல்லிட்டா- கையில் தாலியுடன் கதறும் போலீஸ்காரர்!


விழுப்புரம் மாவட்டம், ஆயுதப்படையில் பணிபுரியும் காவலர் ஒருவர் கையில் தாலியுடன், தன் மனைவி தன்னை ஏமாற்றிவிட்டுச் சென்றுவிட்டதாக கதறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராஜா என்பவர் விழுப்புரம் ஆயுதப்படையில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இவரின் மனைவி சவிதா என்பவரும் அதே ஆயுதப்படையில் பெண் காவலராகப் பணியில் உள்ளார். இவர்களுக்கு 6 வயதில் மகன் இருக்கிறான்.

இந்நிலையில் சில நாள்கள் முன்பு ராஜா பேசி வெளியிட்ட வாட்ஸ் அப் வீடியோ தமிழக காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ் அப் வீடியோவில் ராஜாவின் மகன், “அப்பா வந்து படு வா ப்பா…” என்று கூப்பிடுகிறார். அதற்கு ராஜா கையில் தாலியுடன், “இந்தத் தாலி அப்பா, உன் அம்மா கழுத்தில் கட்டியது. பிள்ளை புருஷன் வேண்டாம்னு உன் அம்மா சொல்லிட்டாங்க. நாம அநாதையாகிட்டோம்” என்கிறார்.

தொடர்ந்து பேசும் அவர், “என் பிள்ளையும் நானும் தனியா அநாதையாக வாழ்ந்துட்டு இருக்கோம். நான் ஏற்கெனவே ஒரு வாழ்க்கையை இழந்து இந்த வாழ்க்கையை அடைந்தவன். என் மனைவியும் இன்னொரு வாழ்க்கையை இழந்து என்னோட வாழ ஆரம்பிச்சா. உலகத்துல இருக்க்கும் மனைவி யாரும் இவளைப்போல் இருக்கமாட்டாங்க. என் மனைவி மாதிரி ராட்ஸசியை யாரும் பார்க்கவே முடியாது.

ஆனா, அவங்க என் கணவர் மோசமானவர், திமிருப்பிடிச்சவன்னு சொல்வாங்க. விழுப்புரம் மயிலத்தில் உள்ள டி.எஸ்.பி செல்வராஜ், ஆயுதப்படை ஆய்வாளர் நெடுஞ்செழியன், போலீஸ் எஸ்.ஐ வசந்த், அப்புறம் பாலாஜின்னு ஒரு போலீஸ். இவங்க எல்லாருடனும் என் மனைவிக்கு Illegal தொடர்பு இருக்கு. இது இங்க அனைவருக்குமே தெரியும். இதற்கு முன்னர் இருந்த ஆர்.ஐ சிவராம ஜெயம் அவருக்கும் தெரியும். அவர் கூப்பிட்டுக் கண்டித்தார்.

அதன் பிறகும் என் மனைவி திருந்தல. அவங்க நடத்தை சரியில்லை. இப்படி அழகான பிள்ளையைப் பெத்துட்டு எப்படி விட்டுட்டுப் போனாங்க. எல்லா தப்பையும் அவங்க பண்ணிட்டு என் மேல புகார் கொடுப்பாங்க. எனக்கு 15 ஆண்டு சர்வீஸ் இருக்கு. நான் வாழ்க்கையில நிறையா தப்பு பண்ணவன்தான்.

ஆனா, இப்போ எதுவும் பண்ணல. என் முதல் மனைவிக்கும் எனக்கும் பிறந்த இரண்டு பெண் குழந்தைகளும் என்னை நம்பிதான் இருக்காங்க. என் மகன் மகள்களுக்காக நான் உழைக்கணும். சம்பாதிக்கணும். என் புள்ளைங்களுக்கு நல்லது பண்ணனும்னு ஆசைபட்றேன்.

நான் ஒரு காலத்தில் கெட்டவனாக இருந்தேன். இப்ப தவறுகளை உணர்ந்து, சம்பாதிக்கணும் எனக்கு உதவி பண்ணுங்க. இதற்குமேல் என்னால் பேச முடியல’’ என்று கதறி அழுதபடி வீடியோவை துண்டிக்கிறார். இந்த வீடியோ விழுப்புரம் பகுதி மக்களின் வாட்ஸ் அப்பில் அதிகம் பகிரப்பட்டது.-Source: vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!