மாமியாரை கொன்று ரத்தம் குடித்த மருமகன் – மாமனார் பரபரப்பு புகார்..!


ஜார்கண்ட் மாநிலம் ரங்கமடி கிராமத்தை சேர்ந்தவர் பிஹலிந்ரா லோரா. இவர் தனது மாமியார் ஷகுரா தேவி (45)-யை 2 நாட்களுக்கு முன் கொடூரமாக கொலை செய்துள்ளார். இது குறித்து லோராவின் மாமனார் பர்னா போலீசில் புகார் அளித்த நிலையில் தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

லோரா போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், நான் பில்லி, சூனியம், மாந்ரீகம் போன்ற விஷயங்களை செய்துவந்தேன். எனக்கு இதில் அபூர்வ சக்திகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக என் மாமியாரை கூரான ஆயுதத்தால் குத்தி கொலை செய்தேன். பின்னர் அவரின் ரத்தத்தை குடித்தேன் என கூறி அதிரவைத்துள்ளார்.

இதையடுத்து போலீசார் லோராவிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுபோல் தெலுங்கானவில் ராஜன்னா சிர்சில்லா மாவட்டத்தில் அபூர்வ சக்தி கிடைக்க மகன் ஒருவன் தாயை கொலை செய்து உள்ளான். தந்தை கொடுத்த புகாரின் பேரில் அவன் கைது செய்யப்பட்டு உள்ளான்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!