வீட்டிலேயே பாதிப்படைந்த தலைமுடியை இயற்கையாக சரி செய்வது எப்படி..?


முடியானது சுரம், புறணி புறத்தோல் என மூன்று அடுக்குகளால் உருவானது. புறத்தோல் முடியை பாதிப்படையாமல் பேணும். இதில் பாதிப்புகள் ஏற்படும் போது முடி முழுவதுமாக பாதிப்படைய நேரிடும். இதனால் முடி உலர்வடைதல் மற்றும் உடைதல், பொழிவிழத்தல், நுனிப் பகுதியில் வெடிப்பு ஏற்படல், தலையில் கடி ஏற்படல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

பாதிப்படைந்த முடியை அழகாக பேணுவது முடியாத காரியமே. இவை பாதிப்படைய அதிக சூரிய வெளிச்சம், இரசாயன பொருட்களின் பயன்பாடு, முடியை அயன் பண்ணல், நீச்சலின் போது குளோரின் நீரின் தாக்கம் போன்றவையும் காரணமாக அமைகிறது.

அதுமட்டுமின்றி தைரோயிட் பிரச்சனை, ஊட்டச்சத்து இன்மை என்பனவும் முடியை பாதிப்படையச் செய்யும். இவற்றில் இருந்து தீர்வை பெற சரியான வழி வீட்டிலேயே உள்ள பொருட்களே. இவற்றில் பக்க விளைவகளும் ஏற்படாது.

இயற்கையாக முடியை பாதுகாப்பது எப்படி??

1. முட்டைமஞ்சள்கரு
முட்டை மஞ்சல் கர்உவில் அதிகளவான புரோட்டின் விட்டமின்கள் இருப்பதனால் முடியின் வேர்ப்பகுட்ஜி, முடி, தலையின் ஆரோக்கியம், வலிமை போன்றவற்றை பேணுவதற்கு உதவும்.

பயன்படுத்தும் முறை:
முட்டை மஞ்சள் கருவை எடுத்து தலையில் வைத்து நன்றாக மசாஜ் செய்து கொள்ளவும். 15 நிமிடங்களின் பின் சம்போ பயன்படுத்தி நீரினால் கழுவவும்.
அல்லது மஞ்சள் கருவை நன்றாக அடித்து அதனை சம்போ போல் பயன்படுத்தவும். இதன் போது மசாஜ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

2. மருதாணி
மருதாணி முடி உதிர்வதை தடுப்பதுடன், விரைவாக முடியை வளரவும் செய்கிறது. இது சூரியக் கதிர்களின் பாதிப்பிலிருந்து முடியை இலகுவாக பாதுகாக்கிறது.

பயன்படுத்தும் முறை:
ஒரு பாத்திரத்தில் 1 கப் மருதாணி பவுடர், 1 மேசைக்கரண்டி கற்றாளைச் சாறு, 1 மேசைக்கரண்டி ஒலிவ் எண்ணெய், 2 மேசைக்கரண்டி தயிர் போன்றவற்றை எடுத்து நன்றாகக் கலந்து கொள்ளவும். இந்த கலவையை பயன்படுத்துவதற்கு முன் தேங்காய் எண்ணெய்யை தலையில் தடவவும். பின் கலவையை தலையில் தடவி 1 மணி நேரத்தின் பின் நீர், சம்போ பயன்படுத்தி கழுவவும். இதனை மாதத்தில் இரு தடவைகள் செய்வது சிறந்தது.

3. தேங்காய்எண்ணெய்
தேங்காய் எண்ணெய்யில் உள்ள லாரிக் அமிலம் முடியின் வளர்ச்சிக்கு அதிகளவில் கைகொடுத்து பாதிப்பிலிருந்து பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

பயன்படுத்தும் முறை:
தேங்காய் எண்ணெய்யை தினமும் இரவில் வைத்து 5 நிமிடங்கள் மசாஜ் செய்து மறுநாள் காலையில் குளிப்பதனால் முடியின் ஆரோக்கியத்தை பேண முடியும்.
அல்லது 3 மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய்யை ¼ கப் தேனுடன் கலந்து அதனை தலையில் வைத்து மசாஜ் செய்து கொள்ளவும். 30 நிமிடங்கலின் பின் நீர் மற்றும் சம்போ பயன்படுத்தி குளிக்கவும். இவ்வாறு வாரத்திற்கு ஒரு தடவை செய்வது சிறந்தது.

4. கற்றாளை
கற்றாளை பொடுகுத் தொல்லையில் இருந்து தீர்வைத் தருவதுடன், முடி மற்றும் தலைப் பகுதிகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

பயன்படுத்தும் முறை:
கற்றாளைச் சாற்றை பாதிப்படைந்த முடியில் நேரடியாக பூசி 15 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும்.
அல்லது, 4 மேசைக்கரண்டி கற்றாளாஇச் சாறு, 3 மேசைக்கரண்டி தயிர், 2 மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய் போன்றவற்றை சேர்த்து கலவையாக எடுத்து தலையில் தேய்த்துக் கொள்ளவும். 30 நிமிடங்களின் பின் சம்போ பயன்படுத்தி குளிக்கவும்.


5. செம்பருத்தி
செம்பருத்த்இ முடி பாதுகாப்பிற்கும், வளர்ச்சிக்கும் சிறந்த தீர்வைப் பெற்றுத் தரும்.

பயன்படுத்தும் முறை:
15-20 செம்பருத்தி இலைகளை எடுத்து பிளண்டரில் அரைத்து தலையில் நேரடியாக தடவி சிறிது நேரத்தின் பின் சம்போ பயன்படுத்தி குளிக்கவும்.
அல்லது 20 இலைகளுடன் 4 முட்டைகளையும் சேர்த்தி பிளண்டரில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதனை தலையில் தடவி 30 நிமிடங்களின் பின் சம்போ பயன்படுத்தி குளிக்கவும். இதனை வாரத்திற்கு ஒரு தடவை செய்து வரலாம்.

6. ஒலிவ்எண்ணெய்
ஒலிவ் எண்ணெய்யில் உள்ள ஊட்டச்சத்துக்கல், முடியின் ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் உதவுகிறது.

பயன்படுத்தும் முறை:
இளஞ் சூடான் ஒலிவ் எண்ணெய் பயன்படுத்தி தலையை மசாஜ் செய்து சூடான துவாயினால் சுற்றிக் கட்டவும். 30 நிமிடங்களின் பின் சம்போ பயன்படுத்தி குளிக்கவும்.
அல்லது ½ கப் ஒலிவ் எண்ணெய்யுடன், ¼ கப் தேனைச் சேர்த்து கலந்து எடுத்துக் கொள்ளவும். அதனை தலையில் தேய்த்து 30 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும்.

7. நெல்லிக்காய்
நெல்லிக் காயில் அதிகளவான விட்டமின் சி இருப்பதனால் முடியினை கறுப்பாகவும், பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் பேண உதவும்.

பயன்படுத்தும் முறை:
நெல்லிக் காய் சிலவற்றை வெட்டி வெயிலில் காய வைத்து கொள்ளவும். அதனை ஒலிவ் எண்ணெய்யில் பவுடராக்கி சேர்த்து 20 நிமிடங்கல் கொதிக்க வைக்கவும். அந்த எண்ணெய்யை தலையில் தடவி மசாஜ் செய்து 30 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும்.

8. அவகோடா
அவகோடாவில் முடிக்குத் தேவையான அமினோஅமிலங்கள் காணப்படுவதனால் முடியின் பாதிப்பிலிருந்து தீர்வைத் தரும்.

பயன்படுத்தும் முறை:
நன்கு பழுத்த அவகோடா பழத்தை மசித்து அதில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். அதனை தலையில் தடவி 30 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும். இதனை வாரத்திற்கு 1 அல்லது 2 தடவைகள் செய்வது சிறந்தது.

9. கொய்யா
கொய்யாவில் அதிகளவான விட்டமின், லைகோபன், பொட்டாசியம் காணப்படுவதனால் முடியின் பாதிப்பிலிருந்து தீர்வைத் தரும்.

பயன்படுத்தும் முறை:
கொய்யா இலை தண்டை அவித்து எடுத்து கொள்ளவும். அதனை தலையில் தடவி மசாக் செய்து கொள்ளவும். இதனை தினமும் செய்து வருவது சிறந்தது.

10. தலை வாருதல்.
மரத்திலான சீப்பை பயன்படுத்தலாம். தலைக்கு எண்ணெய் வைத்து மசாஜ் செய்து வாருதல் சிறந்தது. அளவுக்கதிகமாக முடியை வாருவது பாதிப்பை ஏற்படுத்தி விடும். – © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!