எகிப்தில் 3000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெண்ணின் உடல் கண்டெடுப்பு!


எகிப்து நாட்டில் 3000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெண்ணின் உடல் பதப்படுத்துப்பட்டிருந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே பிரமிடுகளை பற்றிய ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. அதிலும் துஷார் நகரில் உள்ள 2-ம் அமன்ஹாத் என்ற அரசனின் பிரமிடு பற்றிய ஆராய்ச்சி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆராய்ச்சியின் போது ஏராளமான பொருட்களும், மம்மிகளும் கைப்பற்றப்பட்டன. மேலும், அதிகமான பிரமிடு பற்றிய ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் 3 ஆயிரம் ஆண்டு பழமையான ஒரு பெண்ணின் உடல் பதப்படுத்தப்பட்ட நிலையில் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தப் பெண் கி.மு. ஆயிரத்து 85 முதல் கி.மு. 332 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். மேலும் இது போன்ற மூன்று உடல்கள் பதப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளன என்பதையும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவைப் போன்ற உடல்கள் பெரும்பாலும் கார்ட்டன்னெஜ் என்ற மெல்லிய கலவை உள்ளடக்கிய ஒரு பொருளால் பதப்படுத்தப்படுகிறது.

இதேபோல் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் எகிப்திய பிரமிடுகள் சுமார் 3,700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.-
source: eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!