நாசா அனுப்பிய இன்சைட் ரோபோ – செவ்வாயில் வெற்றிகரமாக தரையிறங்கியது..!


அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா செவ்வாய் கிரகத்தில் புதிய ரோபோ ஒன்றை தரையிறக்கியுள்ளது.தி இன்சைட் (The InSight probe) எனப்படும் அந்த ரோபோ, செவ்வாய் கிரகத்தின் ஆழமான மற்றும் உள் பகுதிகள் குறித்து ஆராய்ச்சி செய்யும் நோக்கத்துடன் அனுப்பப்பட்டுள்ளது.

பூமியை தவிர செவ்வாயில் மட்டும்தான் இது போன்ற ஆராய்ச்சி நடக்கிறது. சுமார் 7 மாத பயணத்திற்கு பிறகு நேற்று மாலை செவ்வாயில் தரையிறங்கியதாக நாசா அறிவித்துள்ளது.

இன்சைட் பத்திரமாக தரையிறங்கியது உறுதியானவுடன், கலிஃபோர்னியாவின் உள்ள நாசா மையத்தில் இருந்த விஞ்ஞானிகள் ஆரவாரம் செய்தனர். இந்த ரோபோ இயந்திரம் செவ்வாய் கிரகத்தின் மத்திய ரேகை பகுதிக்கு அருகே உள்ள அலிசிம் பிளானீசியா என்ற பகுதியில் தரையிறங்கியது. இன்சைட் ரோபோ தரையிறங்கிய சில நிமிடங்களில் நிலப்பரப்பின் முதல் புகைப்படத்தை எடுத்து அனுப்பியது.-source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!