20 வருடம் முன் காணாமல் போன பிளாப்பி டிஸ்க்.. பல்லாயிரம் அடி உயரத்தில் விண்வெளியில் கிடைத்த அதிசயம்!

நியூயார்க்: விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் 20 வருடம் முன் காணாமல் போன பிளாப்பி டிஸ்க்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிளாப்பி டிஸ்க்குகள் கம்யூட்டர்கள் பயன்படுத்தும் தொடக்க காலத்தில் பயன்படுத்தப்பட்டது. இப்பொது உலகில் யாருமே பிளாப்பி டிஸ்க்குகளை பயன்படுத்துவதில்லை.

இந்த நிலையில் அந்த பிளாப்பி டிஸ்க்குகள் பல்லாயிரம் அடி உயரத்தில் சுற்றிக்கொண்டு இருக்கும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் எனப்படும் ஸ்பேஸ் ஸ்டேஷன் உருவாக்கப்பட்டு 20 வருடம் முடிந்துவிட்டது. 1998ல் இந்த ஸ்பேஸ் ஸ்டேஷன் உருவாக்கப்பட்டது. அதன் 20வது வருட கொண்டாட்டம் கடந்த ஒரு வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலக நாடுகள் இதை பெரிய அளவில் கொண்டாடி வருகிறது.

இந்த நிலையில் 20 வருட கொண்டாடட்டம் என்பதால் அங்கிருக்கும் பழைய பொருட்களை எல்லாம், தேடி பிடித்து அதன் புகைப்படங்களை விஞ்ஞானிகள் வெளியிட்டனர். அதாவது ஸ்பேஸ் ஸ்டேஷனில் இருக்கும் பழமையான பொருட்களை போட்டோ எடுத்து டிவிட்டரில் அப்லோட் செய்தனர். அப்போது அங்கிருந்த பிளாப்பி டிஸ்குகள் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பிளாப்பி டிஸ்க் 20 வருடம் முன் காணாமல் போனதாக கூறப்படுகிறது. அதாவது அந்த ஸ்பேஸ் ஸ்டேஷன் உருவாக்கப்பட்ட சில நாட்களில் இந்த பிளாப்பி டிஸ்க் மொத்தமாக காணாமல் போய் இருக்கலாம். அதை இப்போதுதான் கண்டுபிடிக்கிறார்கள்.

இதற்குள் என்ன தகவல்கள் இருக்கிறது என்று இன்னும் விவரம் வெளியாகவில்லை. இதனுள் 20 வருடத்திற்கும் முந்தைய முக்கியமான விஷயங்கள் இருக்க வாய்ப்புள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இதை பூமிக்கு எடுத்து வந்த பின் சோதனை செய்ய போவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கிறார்கள். – Source: oneindia


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.