கூகுள் நிறுவனம் டேட்டாலி எனும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.


கூகுள் நிறுவனம் டேட்டாலி எனும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. மொபைல் டேட்டாவை திட்டமிட்டு இயக்க புதிய செயலி எவ்வாறு வேலை செய்யும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ வரவுக்கு பின் பலரும் டேட்டா பயன்பாடு சார்ந்த கவலைகளை கடந்து எல்லையில்லாமல் டேட்டா பயன்படுத்தி வருகின்றனர்.

ஜியோ இலவசங்கள், நிறைவுற்றதும், ஜியோ மலிவு விலை சேவைகள் மற்ற நிறுவனங்களும் வழங்கி வருவதை தொடர்ந்து கூகுள் நிறுவனம் டேட்டாலி (Datally) எனும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.

புதிய டேட்டாலி செயலியை கொண்டு ஸ்மார்ட்போன் டேட்டா பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியும். இந்த செயலி ஸ்மார்ட்போனில் எவ்வளவு டேட்டா பயன்படுத்தப்படுகிறது, எந்தெந்த செயலிகள் அதிகளவு டேட்டாவை பேக்கிரவுண்டில் பயன்படுத்துகின்றன என்ற தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.

இதன் மூலம் மொபைல் டேட்டா வீணாவதை தடுக்க முடியும். கூகுளின் டேட்டாலி செயலி மொபைல் டேட்டாவை சரியாக புரிந்து கொண்டு, கட்டுப்படுத்தி அவற்றை சேமிக்கும். இந்த செயலி எவ்வாறு வேலை செய்கிறது என்பதை கூகுள் தெரிவித்துள்ளது.


அதன்படி டேட்டாலி செயலி உங்களது ஸ்மார்ட்போனின் மொபைல் டேட்டா பயன்பாட்டை ஒரு மணி நேரம், தினசரி, வாராந்திர மற்றும் மாதாந்திர அடிப்படையில் டிராக் செய்யும். இதைத் தொடர்ந்து அதிகளவு மொபைல் டேட்டாவினை சேமிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை டேட்டாலி செயலி பரிந்துரைக்கும்.

டேட்டாலி செயலியின் டேட்டா சேவர் அம்சம் பின்னணியில் இயங்கும் செயலிகளை கட்டுப்படுத்தி, ஸ்மார்ட்போனில் இயங்கும் ஒவ்வொரு செயலியும் எந்தளவு டேட்டா பயன்படுத்துகிறது என்பதை நிக நேரத்தில் காண்பிக்கும்.

குறிப்பிட்ட செயலி ஏதேனும் அதிகளவு டேட்டா பயன்படுத்துவதை கண்டால் செயலியில் ஒரு கிளிக் செய்து டேட்டா பயன்பாட்டை குறிப்பிட்ட செயலியில் மட்டும் நிறுத்த முடியும்.

செயலிகள் பயன்படுத்தும் டேட்டா அளவை கண்டறிய டேட்டாலி செயலியில் வி.பி.என். கணெக்ஷன் பயன்படுத்தப்படுகிறது.

இதுமட்டுமின்றி வாடிக்கையாளர்கள் செல்லும் இடங்களில் கிடைக்கும் பொது வை-பை இருப்பதை நோட்டிபிகேஷன் மூலம் தெரியப்படுத்தும், இதன் மூலம் உங்களது டேட்டா பயன்படுத்துவதை தவிர்க்க முடியும்.

Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!