இணையத்தில் வைரலான ஸ்னாப்டிராகன் 670 பிராசஸர் கொண்ட பிக்சல் ஸ்மார்ட்போன்..!!


கூகுள் நிறுவனத்தின் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் விவரங்கள் அவ்வப்போது வெளியாகி வந்த நிலையில், இம்முறை ஸ்மார்ட்போனின் புகைப்படம் லீக் ஆகியுள்ளது. முன்னதாக ஏ.ஆர். கோர் ஏ.பி.கே. டியர்டவுன் மூலம் வெளியாகி இருந்த நிலையில் புதிய பிக்சல் 3 லைட் ஸ்மார்ட்போன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

தற்சமயம் வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் பிக்சல் 3 லைட் மாடலில் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, நாட்ச் வழங்கப்படவில்லை. வடிவமைப்பைப் பொருத்த வரை பாலிகார்போனேட் ஷெல் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதைதை பார்க்க முந்தைய நோக்கியா லூமியா மற்றும் ஐபோன் 5சி போன்களை நினைவூட்டுகிறது.

பிக்சல் 3 லைட் சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.56 இன்ச் ஐ.எஸ்.பி. டிஸ்ப்ளே, ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 2220×1080 பிக்சல் ரெசல்யூஷன், ஸ்னாப்டிராகன் 670 பிராசஸர், 4 ஜி.பி. ரேம் மற்றும் 32 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. இதனுடன் யு.எஸ்.பி. டைப்-சி போர்ட், ஸ்பீக்கர் கிரில் கொண்டிருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க பிக்சல் 3 லைட் ஸ்மார்ட்போனின் பின்புறம் ஒற்றை கேமரா சென்சார், எல்.இ.டி. ஃபிளாஷ், வட்ட வடிவம் கொண்ட கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. செல்ஃபி எடுக்க 8 எம்.பி. கேமரா வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்துடன் 2915 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. கூகுள் போன் என்பதால், பிக்சல் 3 லைட் மாடலில் ஆன்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இயங்கும் என கூறப்படுகிறது.source-maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.