வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்த இந்திய அணி..!! வாழ்த்து கூறிய தலைவர்..!!


இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்திலும், லக்னோவில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 71 ரன்களிலும், சென்னையில் நேற்று நடைபெற்ற கடைசி போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸை 3-0 என இந்தியா ஒயிட்வாஷ் செய்தது.

சிறப்பாக விளையாடி 3-0 எனக்கைப்பற்றிய இந்திய அணிக்கு ஓய்வில் இருக்கும் கேப்டன் விராட் கோலி மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் ஆகியோர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.source-maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!