சர்கார் படத்தால் நடக்கும் கூத்து – இலவச வீட்டை உடைத்த விஜய் ரசிகன் – அதிர்ச்சி வீடியோ..!

தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி தினம் அன்று வெளியான திரைப்படம் ‘சர்கார்’. பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தாலும் தற்போது வரை, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று தமிழ்நாடு மட்டும் இன்றி மற்ற இடங்களிலும் முதலுக்கு மோசம் இல்லாத வகையில் நல்ல வசூல் செய்து வருகிறது.

ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக இந்த படத்தில் இருந்து நான்கு காட்சிகள் துண்டிக்கப்பட்டதால், முன்பு இருந்த வரவேற்பை விட இப்போது இந்த படத்திற்கு சற்று வரவேற்பு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்… ஏற்கனவே விஜய் ரசிகர்கள் சிலர், திரைப்படத்தில் வந்த காட்சிகளை போல சிலர் தங்கள் வீட்டில் இருந்த , இலவச பொருட்கள் மிஸ்சி கிரைண்டர் போன்றவற்றை உடைத்து விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து தற்போது ரசிகர் ஒருவர் ஒரு படி மேலே சென்று அரசாங்கம் இலவசமாக கட்டிக்கொடித்த வீட்டை உடைக்கிறார் என கூறி ஒரு வீடியோ வெளியாகி பார்ப்பவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால் இது உண்மையில் விஜய் ரசிகர் வீட்டை உடைக்கும் காட்சியா அல்லது வேறு ஏதாவது பணிக்காக வீடு உடைக்கப்படுகிறதா என உண்மை தகவல் வெளியாகவில்லை.-source: asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!