பிறப்புறுப்பு இல்லாமலே ஏலியனாக வாழ துடிக்கும் விநோத இளைஞர்!! எங்கு தெரியுமா..?


அமெரிக்காவில் உள்ள 22 வயது இளைஞர் ஒருவருக்கு விநோத ஆசை ஏற்பட்டுள்ளது. ஆம், அந்த இளைஞர் தன்னை எந்த பாலினத்தையும் சாராத ஏலியனாக மாற்றிக்கொள்ள முயற்சித்து வருகிறார்.

அமெரிக்காவை சேர்ந்த கலிபோர்னியாவில் வசித்து வருகிறார். இவர் பகுதி நேர மாடலாகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவருக்கு ஏலியனாக மாறும் எண்ணம் தோன்றியுள்ளது. இதனால், தனது 17 வயது முதல் இதற்காக முயற்சித்து வருகிறார்.

இதுவரை 110 பிளாஸ்டிக் சர்சரிகளை மேற்கொண்டுள்ள அவர், அடுத்த கட்டமாக தனது பிறப்புறுப்பை அகற்றி, எந்த பாலினத்தையும் சாராத ஏலியனாக மாறும் முயற்சியில் ஈடுபடவுள்ளார்.


இதுவரை அறுவை சிக்ச்சைகளுக்கு அதிக செலவி செய்துள்ள இவர், தனது பிறப்புறுப்பு மற்றும் தொப்புளை அகற்ற 130,000 டாலர்களை செலவிடவுள்ளார். மேலும், பிறப்புறுப்பு இல்லாமல் என்னால் வாழ முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், இவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்போகும் மருத்துவர்களோ அதிர்ஷடம் இருந்தால் மட்டுமே பிறப்புறுப்பு இல்லாமல் வாழ முடியும். இல்லையெனில் இது பெரிய ஆபத்தில் கொண்டு நிறுத்தும் என எச்சரித்துள்ளனர்.

Source: webdunia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!