பல்டி அடித்த லலிதா – ஜெ.வுக்கு பிறந்ததாக கூறப்படும் குழந்தையை நான் பார்த்ததே இல்லை…!


ஜெயலலிதாவின் நெருங்கிய உறவுப்பெண்ணான லலிதா பெங்களூரு பசவனகுடி பகுதியில் வசித்து வருகிறார். அவர் நேற்று, ‘தினத்தந்தி’ நிருபருக்கு சிறப்பு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

“எனது தாயார் ஜெயசீதா. எனது தாயார் உள்பட 3 பேர் உடன் பிறந்தவர்கள். எனது தாயாரின் மூத்த சகோதரி ஜெயலட்சுமி, சகோதரர் ஜெயராமன். எனது தாய்மாமாவான ஜெயராமன்-சந்தியாவின் மகள் தான் கோமளவள்ளி.

பின்னாளில் அவர் ஜெயலலிதா என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார். ஜெயலலிதாவின் உடன் பிறந்த சகோதரர் ஜெயக்குமார். சைலஜாவும் சந்தியாவின் மகள் தான்.

ஆனால் சைலஜாவின் தந்தையும், ஜெயலலிதாவின் தந்தையும் வேறு வேறு. எனது பெரியம்மாள் ஜெயலட்சுமியின் மகன் திருமணத்திற்காக நான் சென்னைக்கு சென்று இருந்தேன்.

அப்போது மைலாப்பூரில் சந்தியா மற்றும் ஜெயலலிதா ஒரு வீட்டில் குடியிருந்தனர். நான் ஜெயலலிதாவிடம் அதிகமாக பேசியது இல்லை. எனது பெரியம்மாள் ஜெயலட்சுமி நுங்கம்பாக்கத்தில் வசித்தார்.

சந்தியா ஏற்கனவே இறந்துவிட்டதால், ஜெயலலிதா அவரிடம் சென்று, பிரசவத்திற்கு உதவுமாறு கேட்டுள்ளார். அதனால் நுங்கம்பாக்கம் வீட்டிலேயே எனது பெரியம்மாள் ஜெயலலிதாவுக்கு பிரசவம் பார்த்தார்.

1980-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்ததாக என்னிடம் கூறினார். ஆனால் அந்த குழந்தையை நான் நேரில் பார்த்தது இல்லை.

சென்னையில் ஒரு முறை நான் மற்றும் எனது அத்தையின் பேத்தி ரஞ்சனி ரவீந்திரநாத் ஆகியோர் ஜெயலலிதாவை சந்திக்க நேரிட்டது. அப்போது அவர், எனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதுபற்றி வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கூறி, சத்தியம் வாங்கினார். இது உண்மை தான். பெங்களூருவில் ஜெயலலிதாவின் தங்கை சைலஜா வசித்து வந்தார்.

அவரும், அவரது கணவரும் இறந்துவிட்டனர். அவர்களுக்கு குழந்தை கிடையாது. ஆனால் அம்ருதா அவர்களின் மகள் தான் என்று சொல்கிறார்கள். அம்ருதா எப்படி அவர்களிடம் வந்தார் என்று எனக்கு தெரியாது.

அம்ருதா ஜெயலலிதாவின் மகளாக இருக்கலாம். அதுபற்றி உறுதியாக என்னால் கூற முடியாது. அதனால் தான் டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொல்கிறேன்.

ஜெயலலிதாவின் சொத்துகள் எங்களுக்கு தேவை இல்லை. அதற்கு நாங்கள் ஆசைப்படவும் இல்லை. நான் பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றேன்.

எனது பெற்றோரை கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற காரணத்தால் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவ்வாறு ஜெயலலிதாவின் நெருங்கிய உறவினரான லலிதா கூறினார்.

Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!